உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசச் சின்னங்கள்

21

(4) கோல்: கோல் என்பது, அரசன் அதிகார முறையில் வீற்றிருக்கும்போதும் செல்லும்போதும் கையிற் பிடித்திருக்கும் தண்டு. அது மணியிழைத்து ஓவிய வேலைப்பாடமைந்த பொற்ற கட்டால் பொதியப் பெற்றிருப்பது. கோல் ஆட்சிக் கறிகுறியாத லால், அரசனுடைய ஆட்சி நேர்மையானதாயிருக்கவேண்டு மென்பதைக் குறித்தற்கு, அது நேரானதாகச் செய்யப்பட்டிருக்கும். அதனால் அதற்குச் செங்கோல் என்று பெயர். செம்மை - நேர்மை. கொடுமையான ஆட்சி கொடுங் கோல் என்னும் பெயராற் குறிக்கப் படும். கொடுமை-வளைவு. ஆட்சியின் நேர்மையாவது அறநெறி வழி நேரே செல்லுதல்; அதன் கொடுமை யாவது அறநெறியினின்று திறம்பி வளைதல்.

(5) மாலை: மாலை என்பது அடையாள மாலை. பாண்டி யனுக்கு வேப்பமாலையும், சோழனுக்கு ஆத்திமாலையும், சேர னுக்குப் பனம்பூமாலையும் அடையாள மாலையாம்.

குறுநில மன்னர்க்கும் ஒவ்வோர் அடையாள மாலை யிருந்தது. ஆய்அண்டிரனுக்குச் சுரபுன்னை மாலையும், ஏறைக்கோனுக்குக் காந்தள் மாலையும் அடையாள மாலையாக இருந்தன.

(6) கட்டில்: கட்டில் என்பது இருக்கை. அரசனது கட்டில் அரசுகட்டில் என்றும் அரசிருக்கை என்றும் அழைக்கப்பெறும். அதன் கால்கள் அரி (சிங்க) வடிவாய் அமைந்திருந்ததினால், அதற்கு அரியணை (சிங்காசனம்) என்றும் பெயர். தலைநகரிலும் பிற பாடி வீடுகளிலும் அரசனுக்கு அரியணையுண்டு. தலைநகரில், அரசன் அரசுவீற்றிருக்கும் ஓலக்க மண்பத்திலும் (Durbar Hall), அமைச்சரொடு சூழும் சூழ்வினை மண்டபத்திலும், அறங்கூறும் மன்றத்திலும், ஒவ்வோர் அரியணையிருக்கும்.

9

அரியணைகட்குச் சிறப்புப்பெயரிட்டு வழங்குவது மரபு. சடாவர்மன் குலசேகரபாண்டியனுக்கு, மதுரையில் ‘மழவராயன்’ கலிங்கராயன் முனையதரையன் என மூவரியணைகளும்; விக்கிரமபாண்டியனுக்கு, மதுரையில் 'முனையதரையன்' என்னும் அரியணையும், இராசேந்திரத்தில் 'மலையதரையன்' என்னும் அரியணையும் இருந்தன.

(7) குடை: குடை என்பது, அரசன் குடிகளைத் துன்பமாகிய வெயிலினின்று காத்து, அவர்கட்கு இன்பமும் பாதுகாப்புமாகிய நிழலைத் தருகின்றான் என்னுங் குறிப்புப்படப் பிடிக்கப்படும், பெரிய வெண்பட்டுக்குடை. அது பகலாயினும் இரவாயினும்,