உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசச் சின்னங்கள்

"கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம்

என்று மதுரைக்காஞ்சியும் கூறுதல் காண்க.

23

(732-3)

போர்முரசு தெய்வத்தன்மை யுள்ளதாகவும் வெற்றியைத் தருவதாகவுங் கருதப்பட்டதினால், அதற்கு மாலையும் பீலியுமணி வதும், பலியிடுவதும், அதை நீராட்டுவதும் வழக்கம்.

(11) கடிமரம்: கடிமரமாவது, ஒவ்வோர் அரசக்குடியின ராலும், அவரவர் குடியொடு தொடர்புள்ளதாகவும் தெய்வத் தன்மையுள்ள தாகவும் கருதப்பட்டு, தொன்றுதொட்டுப் பேணப் பட்டுவரும் ஏதேனுமொரு வகையான காவல்மரம். அது தலைமை யரசர்க்கும் சிற்றரசர்க்கும் பொதுவாகும். பாண்டிநாட்டிலிருந்த பழையன் என்னும் குறுநிலமன்னன், ஒரு வேம்பைக் காவல்மரமாக வளர்த்து வந்தான். செங்குட்டுவனின் பகைவருள் ஒருவன்

கடப்பமரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தான்.

கடிமரம், சில அரசரால் தலைநகரில் மட்டும் தனிமரமாகவும், சிலரால் ஊர்தொறும் தனிமரமாகவும் சிலரால் சோலைதொறும் தனிமரமாகவும் வளர்க்கப்பட்டதாகத் தெரிகின்றது.

(12) குதிரை: அரசன் ஊருங் குதிரை பட்டத்துக் குதிரை என்று அழைக்கப்பெறும். நல்ல மணமும், வாழைப்பூ மடல்போற் காதும், கால் மார்பு கழுத்து முகம் முதுகு ஆகிய ஐந்துறுப்புகளில் வெள்ளையும், 82 விரல் (அங்குலம்) உயரமும் உள்ள சேங்குதிரை அரசிவுளியாதற்குத் தக்கது (பிங்கலம்).

குதிரைகளை, அவற்றின் உடற்கூறும் நடையும் குரலும் இயல்பும் நிறமும் திறமும்பற்றி, பற்பல வகையாகப் பரிநூல் வகுத்துக் கூறும். அவற்றுள் பாடலம் சேரனதும், கோரம் சோழனதும், கனவட்டம் பாண்டியனதும், கந்துகம் குறுநில மன்னரதும் ஆகும்.

அரசர் குதிரைகட்கு இயற்பெயர் போன்ற சிறப்புப் பெயரும் இடப்பெறும். சிலர் தம் பெயரையே இடுவதும் உண்டு. ஓரியின் குதிரை ஓரி என்றும், காரியின் குதிரை காரி என்றும் பெயர் பெற்றிருந்தன.

(13) யானை: அரசன் ஊரும் யானை, அரசுவா என்றும், பட்டத்தியானை என்றும் அழைக்கப்பெறும், கால் போன்றே வாலும் துதியும் நிலத்தைத் தொடுவதும், பால் போலும் வெள்ளை நகமுடையதும், காலாலும் வாலாலும் துதியாலும் கொம்பாலும் உடம்பாலுங் கொல்ல வல்லதும் எழுமுழ வுயரமும் ஒன்பது முழ