உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

அதிகாரிகளின் அமர்த்தம்

ஊர்களிலிருந்த ஆளுங்கணத்தார் ஆங்காங்குள்ள மக்களால் அரசாணை விதிப்படி தேர்ந்தெடுக்கப்பெற்றனர். பிற அரசியல் வினைஞரெல்லாம், பெரும்பாலும் அரசனாலும் அவ்வம் மேலதிகாரி களாலும் அமர்த்தப்பட்டனர்.

ஓர் இளவரசன் அல்லது வேற்றரசன் அரியணையேறு முன்னரே, அவன் முன்னோரால் அல்லது அவனுக்கு முந்தினோ ரால் அமர்த்தப் பெற்று ஏற்கெனவே தத்தம் வினையைச் செவ்வை யாய்ச் செய்து வரும் அரசியல் வினைஞரை, குற்றஞ்செய்தாலொ ழியப் புதிய அரசன் நீக்குவதில்லை. ஒரு வினைஞன், பொறுக்கலா காக் குற்றஞ் செய்தவிடத்தும், தீராத நோய்ப்பட்டவிடத்தும், வினையாற்ற இயலா மூப்பெய்தியவிடத்தும், இறந்தவிடத்தும் அவனுக்குப் பதிலாக ஒருவன் ஆளும் அரசனால் அல்லது மேலதிகாரியால் அமர்த்தப் பெறுவான்.

தகுதி வாய்ந்திருப்பின் இயன்றவிடத்தெல்லாம், தந்தை-மகன் ஆகிய வழிமுறைப்படியே வேலைகள் வழங்கப்பட்டு வந்தன. சிறந்த தகுதி வாய்ந்திருப்பின், கீழ்ப் பதவியாளர் மேற்பதவிக் குயர்த்தப் படுவர்.

ஒவ்வொரு வினைஞனும் தகுதிபற்றியே அமர்த்தப்பட்டா னெனினும், தலைமையமைச்சன் தகுதியையே அரசன் முக்கியமாய்க் கவனித்தான்.

"அறநிலை திரியா அன்பின் அவையத்துத்

66

திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து

மெலிகோல் செய்தே னாகுக

""

'நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்

கொடிதோர்த்த மன்னவன்

(புறம்.71)

(கலித்.8)

என்னும் பகுதிகள், முதலமைச்சன் அரசியலில் எவ்வளவு தனிப் பொறுப்பும் அதிகாரமும் வாயந்தவன் என்பதை உணர்த்தும்.