உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசியல் விளைஞர்

31

பெயர்.

ஆங்காங்குள்ள ஊட்டுப்புரை மடம் மருத்துவச் சாலை முதலிய அறநிலையங்களை மேற்பார்த்தற்கு, தனித்தனிக் குழுவார் அமர்த்தப்பெற்றிருந்தனர். அவருக்கு அறப்புறங்காவலர் என்றும், புண்ணியக்கணப்பெருமக்கள் என்றும் பொற்காசுகளையும் காசாக வழங்கின பொற்கட்டிகளையும் நிறுத்தும் உரைத்தும் நோட்டஞ்செய்யவும், சரியானவற்றின்மேல் முத்திரையிடவும், வண்ணக்கர் என்னும் அலுவலாளர் எல்லாப் பேரூர்களிலுமிருந் தனர்.

அரசிறையும் பிறவரிகளும் தண்டுவதற்கு ஊர்ெ ஊர்தொறும் தண்டுவான் (தண்டலாளன்) என்னும் அரசியல் வினைஞன் இருந்தான். வரி செலுத்தாத குடிகளைத் துன்புறுத்தித் தண்டுபவனுக் குப் பேறாளன் என்று பெயர்.

(5) வேறு சில வினைஞர்: வினையறியப்படாத சில அரசியற் பதவியாளரும் அலுவலாளரும் அதிகாரிகளும், கல்வெட்டிற் குறிக்கப்பட்டுளர். அவர், அரைசுமக்கள், முதலிகள், பழநியாயம், தெரிப்பு, முகவெட்டி, பெரும்பணைக்காரன், நடுவிருக்கை, சிறுதனம், பெருந்தனம், சிறுதரம், பெருந்தரம், பெருந்தரத்துக்கு மேல்நாயகம் 2 முதலியோராவர்.

பெருங்கோயிலுள்ள இடமெல்லாம், அதை மேற்பார்த்தற்கு ஒரு தனிக்குழு இருந்தது. அதைப்பற்றிக் கோயிற்பணிகள் என்னும் அதிகாரத்திற் கூறப்படும்.

1

1. விருக்கை என்பவன், அறங்கூறவையத்தானாய் அல்லது கரணத்தானாய் இருக்கலாம்.

2. சிறுதரம் என்பவன் நாட்டதிகாரியாகவும், பெருந்தரம் என்பவன் வளநாட்டதி காரியாகவும், பெருந்தரத்துக்கு மேல்நாயகம் என்பான் வளநாட்டதிகாரிகள் தலைவனாகவும் இருந்திருக்கலாம்.