உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

பழந்தமிழாட்சி

கவனிப்பது தடிவழிவாரியம்; ஊரிலுள்ள குடும்புகளைக் கவனிப் பது குடும்புவாரியம்.

வற்றுள் சில வாரியங்கள் பலவூர்களி லில்லை. எல்லா ஊர்களிலுமிருந்தவை, ஆட்டைவாரியம், தோட்ட வாரியம் ஏரி வாரியம், பொன்வாரியம், பஞ்சவார வாரியம் என்னும் ஐந்தே. ஆட்டை வாரியத்திற்கு ஊர்வாரியம் தருமவாரியம் என்றும் பெய ருண்டு. கழனி மிகுதியாயில்லா விடத்துத் தோட்டவாரியமே கழனிகளையும், ஏரி குளங்கள் பலவாயில்லாவிடத்து ஏரிவாரியமே கலிங்குகளையும் கவனித்துக் கொள்ளும். ஒவ்வொரு வாரியமும், தனித்தனி சபை அல்லது சிறுகுறி என்றும், எல்லா வாரியமும் சேர்ந்து மகாசபை அல்லது பெருங்குறி என்றும் கூறப்பெறும்.

ஊர்ச்சபைக் கணக்கெழுதுபவன் கரணத்தான் (மத்தியஸ்தன்) எனப்படுவான்; கணக்கு மிகுதியாயில்லாத சிற்றூர்களில் கணக்கு வாரியம் இருந்திராது.

ஊரைக் காவல்செய்பவர்க்குப் பாடிகாவல் என்று பெயர். தலைமைக் காவலனைப் பெரும்பாடிகாவல் அல்லது தலையாரி என்றும், அவனுக்குக் கீழ்ப்பட்டவரைச் சிறுபாடிகாவல் என்றும் கூறுவது வழக்கம்.

கொடிக்கால்கள்

தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனித்தற்கு, வேலிநாயகம் என்றோர் அலுவலாளன் ருந்தான்.

ஊர்ச்சபை வேலைக்காரனுக்கு வெட்டி (வெட்டியாள் வெட்டியான்) என்று பெயர்.

6

'ஊராளி' என்று இலக்கியத்திலும், 'ஊராளன்’, ஊருடை யான்', 'ஊர்மேல் நின்ற திருவடிகள்' என்று கல்வெட்டிலும் வந்திருப்பதால், ஓரிரு பெருநாடுகளில் ஒவ்வோர் ஆள்நில ஊருக்கும் ஓர் அரசியலதிகாரியுமிருந்ததாகத் தெரிகின்றது.

தனியூர்களில் ஒருவகையான நகரங்களில், நகரமக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நகரத்தார் என்னுஞ் சபையார் இருந்தனர்.

(4) பெருநாடெங்குமிருந்த வினைஞர்: தலைநகரிலும், பேரூர்களிலும், வழக்காளிகளின் வழக்கைக் கேட்டு முறை செய்ய அறங்கூறவையமும்; எல்லா ஆள்நில ஊர்களிலும், ஆவணங் களைக் காப்பிடுவதற்கு ஆவணக்களரியும் இருந்தன, அறங்கூற வையத்திற்கு, அறக்களம், மன்றம், தருமாசனம், நியாயசபை என்றும்; அதன் உறுப்பினர்க்கு, அறக்களத்தார், மன்றத்தார், தருமா சனத்தார், நியாயத்தார் என்றும் பெயருண்டு.