உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசியல் விளைஞர்

29

ஆக்குவித்து அரசாணையை நிறைவேற்றும் தலைவர், பொதுவாகக் கருமிகள் அல்லது கன்மிகள் என அழைக்கப்பெறுவர். இவர் ஆக்க வினைத் துறையர். இவரை ஏவி நடத்துவோர் கருமவிதிகள் ஆவர். இவரல்லாத பிறரெல்லாம் ஆள்வினைத் துறையர்.

(2)மூவகைச் சிறுநாட்டுத் தலைநகர்களிலுமிருந்த வினைஞர்: மண்டலம் வளநாடு நாடு என்னும் (அல்லது இவற்றிற்கொத்த ) ஆள்நிலப்பிரிவுகளுள், ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு தலைவன் அல்லது அதிகாரி இருந்தான். மண்டல அதிகாரிக்கு மண்டலிகன் அல்லது மண்டல முதலி என்று பெயர். நாட்டதிகாரிக்கு நாடாள் வான் என்றும், நாட்டு நாயகம் என்றும், நாடுடையான் என்றும், நாட்டுவியவன் என்றும் பெயர். வளநாட்டதிகாரிளும் நாட்டதி காரிகள் போன்றே அழைக்கப்பட்டனர் போலும்.

நாட்டைக் கூறுபட அளப்பதற்கு நாடளப்போர் என்றும், நாட்டை யளந்ததைக் கண்காணித்து உண்மை காண்பதற்கு நாடுகண்காட்சி என்றும், கூறுபட அளந்த நாட்டிற்கு வரி விதித்தற்கு நாடுகூறு என்றும், நாட்டைக் காவல் செய்தற்கு நாடுகாவல் என்றும் பல அரசியல் அலுவலாளர் இருந்தனர்.

(3) ஊர்களிலிருந்த வினைஞர்: ஒவ்வோர் (ஆள்நில) ஊரையும் ஆள்வதற்கு, அரசனாணைப்படி ஊர்மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு சபை இருந்தது. அச் சபையார்க்கு ஆளுங் கணம் என்றும், கணப்பெருமக்கள் என்றும், வாரியப்பெரு மக்கள் என்றும், கணவாரியப் பெருமக்கள் என்றும் பெயர்.

ஊர்ச்சபையானது; ஊராட்சிபற்றிய பல்வேறு காரியங் களைக் கவனித்தற்கு, பல்வேறு வாரியமாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வாரியம் என்பது மேற்பார்வை அல்லது மேலாண்மை. ஊரைப் பற்றிய பொதுக்காரியங்களையும், அறமுறை குற்றத்தீர்ப்பு முதலிய வற்றையும், கவனிப்பது ஆட்டைவாரியம் (சம்வத்சரவாரியம்); தோட்டம் தோப்பு புன்செய் முதலியவற்றைக் கவனிப்பது தோட்ட வாரியம்; நன்செய்களைக் கவனிப்பது கழனிவாரியம்; ஏரி குளம் ஆறு முதலிய நீர்நிலைகளைக் கவனிப்பது ஏரி வாரியம்; ஏரி குளங்களிலுள்ள கலிங்குகளையும் மதகுகளையுங் கவனிப்பது கலிங்குவாரியம்; ஊரில் வழங்கும் நாணயங்களை நோட்டஞ் செய்து நற்காசுகளையே செலாவணியாக்குவது பொன்வாரியம்; ஊர்ச்சபைக் கணக்குகளைக் கவனிப்பது கணக்கு வாரியம்; பஞ்சகாலத்திற் பயன்படும்படி வளமைக்காலத்தில் உணவுப் பொருள்களைத்

களைத் தொகுத்துவைப்பது பஞ்சவார வாரியம் (பஞ்ச வாரியம்); ஊரிலும் அக்கம்பக்கத்திலுமுள்ள பெருவழிக