உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

பழந்தமிழாட்சி

ஊர்ச்சபைத் தேர்தல் போன்றே, நகரத்தார் என்னும் நகர சபைத் தேர்தலும், நகரமாந்தர் என்னும் தலைநகர்ப் பெருமக்கள் தேர்தலும், நடந்திருக்கலாம்.

தேர்தல் விதிகள், தேவையான போதெல்லாம், அவ்வக் காலத்து அரசனால் திருத்தி யமைக்கப்பெறும். அக்காலத்துத் தேர்தல் இக்காலத்துத் தேர்தல் போலாது, குடவோலை முறையும் திருவுளச் சீட்டு முறையுங் கலந்ததாகும். ஆயின், இக்காலத்து விருப்பாளர் (அபேட்சகர்) செய்யும் வலக்காரங்களையும் கையா ளும் தீயவழிகளையும், அக்காலத்துத் தகுதியாளர் பெரும்பாலும் கையாண்டிருக்க முடியாது. அதோடு குடவோலைகளையெண் ணும் தொல்லையும் அக்காலத்தில்லை.

குடவோலையாளரின் தகுதி கல்வெட்டுகளிற் குறிக்கப்பட் டிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், வளர்ச்சி யுற்றாருள் எழுதப் படிக்கத் தெரிந்தவரெல்லாம் குடவோலை யாண்மை பெற்றார் என ஊகிக்க இடமுண்டு.

சதுர்வேதி மங்கலச் சபைத் தேர்தல்: பார்ப்பனர் தலைமை யாயிருந்த சதுர்வேதி மங்கலச்சபைத் தேர்தலில் வாரியத் தகுதி பற்றிய விதிகளுள் இரண்டொன்று வேறுபட்டிருந்தன. அவை

யாவன :

(1) "எழுபது பிராயத்தின்கீழ் முப்பத்தைந்து பிராயத்தின்

மேற்பட்டார் மந்திரப் பிராம்மணம் வல்லார் ஓதுவித்து அறிவானைக் குடவோலை இடுவதாகவும்".

(2) “அரைக்கானிலமே உடையானாயினும், ஒரு வேதம் வல்லா னாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் அவனையும், குட வோலை எழுதிப்புக இடுவதாகவும்”!

பார்ப்பனரல்லாதாருள் ஒருவரும் வேதம் வல்லாராய் அக் காலத் திருந்திருக்க முடியாதாதலானும், இங்குக் காட்டிய இரு விதி களும் பார்ப்பனத் தலைமையிலிருந்த உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலச் சபைத் தேர்தல் விதிகளாதலானும், இவை சதுர்வேதி மங் கலங்கட்கேயன்றிப் பிறவூர்கட்குரியவல்ல என்பது வெள்ளிடை

மலையாம்.

இனி,பாண்டிநாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மானூர்ச்சபைத் தேர்தலைப்பற்றிக் கிடைத்துள்ள கல்வெட்டு செய்தியோ, முற்றிலும் வேறுபட்டிருப்பதுடன் வியப்பை விளைப்ப தாகவும் இருக்கின்றது.

1. Pndyan kingdom p.93-4 (மொழி பெயர்ப்பு)