உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அதிகாரிகளின் அமர்த்தம்

மானூர்ச்சபை விதிகளாவன

39

(1) “ஊர்க்கரையாளர் மக்களில் மந்திரப் பிரமாணமும் தருமமும் கற்ற ஒருவனே, ஊர் மன்றில் தன் தந்தையின் கரைக்குரிய உறுப்பினனாக இருக்கலாம்; அதே தகுதியுள்ளவனே, விற்கப்பட்ட அல்லது விலைக்கு வாங்கப்பட்ட அல்லது பெண்ணுடைமையாகப் பெறப்பட்ட கரைக்குரிய ஆளாக மன்றில் இருக்கலாம்.

(2) இங்ஙனம் மூவகையில் அடையப் பெற்ற கரை, ஒருவனை முழுவுறுப்பாண்மைக் (Full membership) கன்றி, கால் அரை முக்கால் உறுப்பாண்மைக்கு உரியவனாக்காது.

(3) கரையை விலைக்கு வாங்குவோர், ஒரு வேத முழுவதையும் அதன் பரிச்சிட்டங்களோடு நன்றாக ஓதியிருப்பானையே, தம் கரைக்குரிய உறுப்பினனாகத் தேர வேண்டும்.

(4) முழு

வுறுப்பாண்மையில்லாதார்,

ஊர்க்காரியங்களை

நிறைவேற்ற எந்த வாரியத்திலும் இருக்க முடியாது.

(5) இத் தகுதி யெல்லாமுடையோர், ஊர்மன்ற நடவடிக்கை களில், ஒவ்வொரு முன்னீட்டையும்(Proposal) கட்டுப்பாடாக எதிர்க்கவுந் தடுக்கவுங் கூடாது.

(6) இங்ஙனம் தடங்கல் செய்தோர், தாமும் தம் சார்பாளருமாக, தம்மாற் செய்யப்பட்ட ஒவ்வொரு தடங்கற்கும் ஐங்காசு தண்டமிறுத்து விதிகட்குங் கட்டுப்பாடுவாராக.?

இவ் விதிகளால், மானூர் அந்தணப் பெருமக்கள், ஊர் மக்களின் குடவோலைத் தேர்தலாற் பெறக்கூடிய ஊர் மன்ற உறுப்பாண்மையை, நிலையான சொந்தவுடைமையாக்கிக் கொண் டிருந்தனரென்பதும், அவ் வுறுப்பாண்மை பிறவுடைமைகள்போல் விற்கப்பட்டும் விலைக்கு வாங்கப்பட்டும் பெண்டனமாக அளிக்கப் பட்டும் வந்தன என்பதும், அறியப்படும்.

1. சோழவமிசச் சரித்திரச் சுருக்கம் ப.53