உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படையும் பாதுகாப்பும்

66

‘உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென

நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப"

43

(புறம்.63)

என்று கோவூர்கிழாரும்,

"உறினுயி ரஞ்சா மறவர் இறைவன்

செறினுஞ்சீர் குன்ற லிலர்”.

(குறள்)

என்று வள்ளுவனாரும், கூறியிருத்தலால்; நீண்ட நாளாகப் போர் பெறாத தொல்படை தன் மறமிகையால் தானே போருக்கு முனை வதும், அரசன் தடுப்பினும் மீறுவதும் உண்டென்பதறியப்படும்.

கூலிப்படையாவது, போர்க்காலத்தில் புதுவதாகக் கூலிக் கமர்த்தப்படுவது, நாட்டுப்படை மருதநில மக்கள் சேர்ந்தது. காட்டுப்படை பாலைநில வாசிகளும் குறிஞ்சிநில மாந்தரும் சேர்ந்தது. அரசபக்தியாலும் நாட்டுப் பற்றாலும், கூலிக்கன்றித் தொண்டு காரணமாகத் தாமாக வந்துதவும் ஊர்மக்கள்படை

குடிப்படைஎனப்படும்.

போர்க்காலத்துப் பெரும்படை அமைதிக் காலத்து வேண்டா வாதலின், போர் முடிந்த பின் மூலப்படையொழிந்த பிறவெல்லாம் கலைக்கப்படுவது மரபு. அன்று மூலப்படைப் பகுதிகள் தலைநகரி லும், பிற கோநகர்களிலும் எல்லைப் புறங்களிலும், புதிதாய் வெல் லப்பட்ட பகைவர் நாட்டிலும் நிறுத்தப் பெறும். அங்ஙனம் நிறுத்தப் பெற்றவை நிலைப்படை எனப் பெயர்பெறும். முதற் குலோத்துங்கன் கோட்டாற்றில் ஒரு நிலைப்படையை நிறுத்தியிருந் தான். கலைக்கப்பட்ட படையினர் தம் மரபுத் தொழிலைச் செய்து வருவர்.

நிலைப்படை நிறுத்தப்பட்ட நகர் படைவீடு என்றும், அது நிறுத்தப்பட்ட நிலப்பகுதி படைப்பற்று என்றும், அது குடியிருக் கும் வீட்டுத் தொகுதி படைநிலை என்றும் பெயர்பெறும். நிலைப் படையினர் மனைவி மக்களுடன் கூடிவாழ்வர்.

படைப்பயிற்சி: அரசரும் படைமறவரும் மற்போர் படைக்கலப் போர் ஆகிய இருவகைப் போரும் பயின்று வந்தனர்.

மற்போர் பயில்வதற்கு ஆங்காங்குப் போரவை அல்லது முரண்களரி எனப்படும் பயிற்சிக் கூடங்களிருந்தன. கோப்பெருநற் கிள்ளி என்னுஞ் சோழன் ஒரு போரவை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெருநற்கிள்ளி எனப்பட்டான்.