உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

66

வயின்வயின்

உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை

வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை அழுந்தப் பற்றி அகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை

பழந்தமிழாட்சி

மகிழ்ந்தன்று மலிந்தன்றும் அதனினு மிலனே’

99

(புறம்.77)

"இன்கடுங் கள்ளிய ஆமூ ராங்கண் மைந்துபட மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே

பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை யொசிய எற்றிக்

களம்புகு மல்லற் கடந்தடு நிலையே"

(புறம். 77)

என்னும் செய்யுள்கள், முறையே, தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பல மல்லரையும், போரவைக் கோப்பெரு நற் கிள்ளி ஆமூர் மல்லனையும், மற்போரிற் கொன்றதைத் தெரி விக்கும்.

முருக்கமரத்தின் பருத்த அடியை நட்டு அதன்மேற் படைக் கலங்களை யெறிந்து, பொருநர் எறிபடைப்போர் பயின்றனர் என்பது,

'இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின செறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம்

. ""

என்பதால் அறியலாகும்.

(புறம். 69)

அரண்மனையை யடுத்த செண்டுவெளி அல்லது வையாளி வீF எனப்படும் வெளிநிலத்தில், வாசி வாரியர் என்போர் குதிரைகட்கு ருசாரிகளும் ஐங்கதிகளும் பதினெண் மண்டிலங்களும் பயிற்றினர். அவருள் தலைமையானவன் அரசாரியன் எனப்பட் டான்.

காழோர் வாதுவர் என்போர் யானைகளைப் போர்த்துறையிற் பயிற்றினர்.

படைப்பிரிவுகள்: படைகள், கருவிவகையாலும், ஊர்தி வகையாலும், குல நில மொழி வகையாலும், ஊழிய வகையாலும், முதுமை வகையாலும், வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பெயர் பெற்றிருந்தன. அப் பெயர்கள், பெரும்பாலும், அரசனுடைய கொற்றப் பெயர்களை முன்னுறுப்பாகக் கொண்டிருக்கும்.