உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

2. பாதுகாப்பு

பழந்தமிழாட்சி

தற்காப்பு: அரசனுக்குக் கட்டடவகையாலும் காவலாள் வகையாலும், சிறந்த தற்காப்பு வசதிகள் ஏற்பட்டிருந்தன.

கள்வரும் பகைவரும் ஏறற்கரிய மதிலும், பகைவரைத் தொலைவிலேயே காண்டற்கும், உள் மனைக்கலகத்திலும் போரி லும் ஏறிப்பொருதற்கும், உய்தற்குமுரிய கோபுரமும்; பகைவன் தலைநகரை முற்றுகையிடும்போது, நொச்சிப்போர் இயலாதாயின் கரந்து வெளிப்படற்குரிய சுருங்கையும்; கட்டடவகையான

தற்காப்பாகும்.

மெய்காவலரும்

இருபாலார்.

வேளைக்காரருமெனக்

காவலாளர்

மெய்காவலர், அணுக்கர் எனவும், வாசல் மெய்காப்போர் எனவும், பரிவார மெய்காப்போர் எனவும் மூவகையர். அவர், முறையே, அரசனுக்கு நெருங்கி நிற்பவரும், அரசன் அரண்மனைக்கு வாயில்களில் நிற்பவரும், அரசன் அரண்மனைக்கு வெளியே சல்லுங்கால் சூழ்ந்து செல்பவரும், ஆவர். பாண்டியனுடைய மெய்காவற் படையில் ரோம கிரேக்கப் பொருநரும் இருந்தனர்.

வாசல் மெய்காப்போரினின்றும் வேறாக, வாசல் காப்போர் என்றும் சிலர் இருந்தனர். வாயில்கள் அணுக்கவாயில் இடைவாயில் தலைவாயில், புறவாயில் எனப் பலவாதலின், வாசல்காப்போரும், 'அணுக்கவாசல் காப்போர்', 'கேரளாந்தகவாசல் காப்போர்' எனப் பல திறத்தார். நடைப் பெருவாயில் எனப்படும் அரண்மனைத் தலை வாயிலில் எப்போதும் ஒரு படைத்தலைவன் நிற்பான்.

பரிவார மெய்காப்போரினின்றும், வேறாகப் பரிவாரத்தார் என்று சில படைப் பிரிவுகளிருந்தன. 'கேரளாந்தகத் தெரிந்த பரிவாரத்தார்' நிகரிலிச் சோழத் தெரிந்த உடனிலைக் குதிரைச் சேவகர்' என்னும் படைப் பிரிவுப் பெயர்கள், பரிவாரத்தாருள் காலாள்மறவரும் குதிரை மறவருமாக இருபிரிவினர் இருந்தமை யைத் தெரிவிக்கும். மூலப் படையை சேர்ந்த பரிவாரத்தார் 'மூலப்பரிவாரம்' என்னும் பெயராற் பிரித்துக் கூறப்பெற்றனர். 'மூலப்பரிவார விட்டேறு' என்னும் பெயர், மூலப்பரிவாரத்துள் கருவிபற்றிய பல பிரிவுகளிருந்தமையைக் காட்டும்.

அரசன்பால் அளவிறந்த அன்பும் பத்தியும் உடைய சிற்றர சரும் படைத்தலைவரும், அவனுக்கு இடுக்கண் நேர்ந்தவிடத்து உடுக்கை இழந்தவன் கைபோல் உதவுவேண்டுமென்னும் பூட்கை மேற் கொண்டு, அவ்வாறு சூளுறவுஞ் செய்து கொள்வர். உற்றிடத்