உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படையும் பாதுகாப்பும்

47

துதவுவ தோடு உடனிறப்பதும் அவர் வழக்கம், வேளையில் வந்து உதவுவதால் அவர்க்கு வேளைக்காரர் என்று பெயர். அவரைப் போன்றே சூளுற்ற படைகள் வேளைக்காரப் படைகள் எனப்படும். வேளைக்காரர்க்குள்ளும் வேளைக்காரப் படைகட்குள்ளும், வலங்கை இடங்கைப் பிரிவுகளும் சிறுதனப் பெருந்தனப் பிரிவுகளும் இருந்தன. பாண்டியனுடைய வேளைக்காரர்க்குத் 'தென்னவன் ஆபத்துதவிகள்' என்று பெயர்.

,

அரசன் சிறந்த படைக்கலப் பயிற்சி பெற்றும் இடை வாளேந்தியு மிருப்பனாதலின், அவன் மெய்வலியுங் கைவாளுங்கூட ஓரளவு தற்காப்பாயிருந்திருத்தல் வேண்டும்.

அரசமகளிர் உறையும் உவளகத்தில், சோனக (மிலேச்ச)ப் பேடியர் வாளேந்தி நின்று காவல் புரிந்து வந்தனர்.

அதிகார வேணவா தந்தையையும் உடன்பிறப்பையும்கூடக் கொல்லுமாதலின், ஐயுறவிற்கிடமான புதல்வரையும் உடன்பிறந் தாரை யும், பருவம் வந்தவுடன் தலைநகர்க்குப் புறம்பே வெவ்வேறு பதவிகளில் அமர்த்தி வைப்பதும் அரசர் வழக்கம்.

தலைநகர்க் காப்பு: தலைநகரானது, மதிலரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலையரண் என்னும் ஐவகை யரண்களுள் பலவற்றைக் கொண்டிருந்தது.

(1) மதிலரண்: மதிலரண் மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப்படும். புரிசை என்பது அவற்றின் பொதுப் பெயர். புரிந்திருப்பது புரிசை. புரிதல் வளைதல் அல்லது சூழ்தல். மதில் நகரைச் சூழ்ந்திருப்பதால் புரிசை எனப்பட்டது.

நால்வகை மதிலரண்களுள், உயரமொன்றேயுடையது மதில்; உயரத்தொடு அகலமுமுடையது எயில்; அவற்றொடு திண்மையு முடையது இஞ்சி; அம் மூன்றொடு அருமையுமுடையது சோ. ஆகவே, சோவரணே தலைசிறந்ததாம்.

"உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கு நூல்" (குறள்.743).

என்றார் திருவள்ளுவரும்

நொச்சிப்போரில் வில்லியர் மேல்நின்று மறைந்து அம் பெய்தற்குரிய புழைகளை யுடையது எயில். அம்பெய்யும் புழை ஏப்புழையென்றும் ஏவறையென்றும் கூறப்படும். எய்யும் யுடையது எயில் எனப்பட்டது.

ல்லை

செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதில் இஞ்சியென்பர். இஞ்சுதல் இறுகுதல். இஞ்சியது இஞ்சி.