உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

பழந்தமிழாட்சி

"செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர்

(கும்பகருணன் வதைப்படலம். 159)

என்று கம்பரும்,

"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு'

""

(புறம்.201)

என்று கபிலரும் பாடியிருப்பதால், இலங்கையிலும் துவாரச முத்திரம் என்னும் துவரை நகரிலும்' இஞ்சியரண் இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது

கோட்டைப்பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது.

ராவணன்

மதிலரணை அருமைப்படுத்துவது பொறியாதலால்,

ஏவறைகளும் பொறிகளுமுடைய

யிருந்திருத்தல் வேண்டும்.

ஞ்சியே சோவரணா

"சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த'

என்று ஆய்ச்சியர் குரவையும்,

"சுழலழலுள் வைகின்று சோ

(சிலப்.)

(4.661.228)

என்று புறப்பொருள் வெண்பாமாலையும், கூறுவதால், இராவணன் நகரிலும் வாணாசுரன் நகரிலும் சோவரண் இருந்ததாகத் தெரிகின்றது. மதுரை மதிலரண் பல பொறிகளைக் கொண்டிருந் ததாக இளங்கோவடிகள் கூறுவதால், அதனை சோவரண் என்னலாம்.

ஒருவகைச்

மதுரைப் புறமதிலிலிருந்த பொறிகளுங் கருவிகளும் உறுப்புக்

களுமாவன:

(1) வளைவிற்பொறி-வளைந்து தானே எய்யும் எந்திர வில். (2) கருவிரலூகம்-கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி.

(3) கல்லுமிழ் கவண் - கல்லையெறியும் இருப்புக் கவண் (இடங்கணி).

(4) பரிவுறு வெந்நெய் - காய்ந்நிறைத்தலாற் சேர்ந்தாரை வருத்தும் நெய்.

(5) பாக்டு குழிசி - செம்புருக்கும் மிடா.

(6) காய்பொன்னுலை - உருகக் காய்ச்சியெறியும் எஃகு உலை,

2 செப்புப்புரிசையிருந்த நகர் துவரையெனப் பெயர்பெற்றது கவனிக்கத் தக்கது. துவர்- சிவப்பு துவரை யென்னும் பயற்றின் பெயரும் இக்காரணம் பற்றியதே. துவர்-துவரை.