படையும் பாதுகாப்பும்
(7) கல்லிடு கூடை வைக்குங் கூடை
(8) தூண்டில்
49
-
டங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு
அகழியைக் கடந்து மதிலைப் பற்றுவாரை
மாட்டியிழுக்குந் தூண்டில் வடிவான பொறி.
(9) தொடக்கு - கழுத்திற் பூட்டி முறுக்குஞ் சங்கிலி.
(10) ஆண்டலையடுப்பு - பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப்புள் வடிவமான பொறிவரிசை.
(11) கவை - அகழியினின்றேறின் அதற்குள் விழத் தள்ளும் இருப்புக்கவை.
-
(12) கழு கழுக்கோல்.
(13) புதை அம்புக்கட்டு.
(14) புழை - ஏவறைகள்.
(15) ஐயவித்துலாம் - அம்புத்திரள் தொங்கவிட்ட விட்டம்.
(16) கைபெயரூசி
-
மதிற்றலையைப் பற்றுவாரின் கையைப்
பொதுக்கும் ஊசிப்பொறிகள்.
(17) சென்றெறி சிரல் - பகைவர்மேற் சென்று அவர் கண்ணைக் கொத்தும் சிச்சிலிக்குருவி வடிவான பொறி.
(18) பன்றி - மதிற்றலையிலேறினா ருடலைக் கொம்பாற் கிழிக்கும் இருப்புப்பன்றி.
(19) பணை அடிக்கும் மூங்கில்தடி வடிவமான பொறி.
(20) எழுவுஞ்சீப்பு - கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தில் கீழே விடும் மரங்கள்.
-
(21) கணையம் கோட்டை மதிற் கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் உத்தரம்.
(22) கோல் - விட்டேறு.
(23) குந்தம் சிறு சவளம்.
(24) வேல்.
(25) ஞாயில் - குருவித் தலை என்னும் மதிலுறுப்புகள்.
(26) நூற்றுவரைக் கொல்லி.
(27) தள்ளிவெட்டி.
(28) களிற்றுப்பொறி.
(29) விழுங்கும் பாம்பு.
(30) கழுகுபொறி.
(31) புலிப்பொறி.