உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

(32) குடப்பாம்பு.

(33) சகடப்பொறி.

(34) தகர்ப்பொறி.

(35) அரி நூற்பொறி.

முதலியன.

பழந்தமிழாட்சி

இவற்றுள், இறுதியிற் குறிக்கப்பட்ட பத்தும், இளங்கோவடி களால் ‘பிற' என்னும் சொல்லால் தழுவப்பெற்று உரையாசிரி யரான அடியார்க்கு நல்லாரால் பெயர் குறிக்கப்பெற்றவை.

தலைநகர்களில், மதில் ஒன்றன்றி ஒன்றனையொன்று சூழ்ந்து பலவாயிருப்பது முண்டு. அக மதில்களை விடப் புறமதில்கள் படிமுறையில் அரண் சிறந்திருக்கும், “கோடுறழ்ந் தெடுத்த” என்னும் பதிற்றுப்பத்துச் செய்யுளில் அகமதில் மதில் என்றும், புறமதில் இஞ்சியென்றும் கூறப்பட்டிருத்தல் காண்க. புறமதிலில்தான் மேற்கூறிய பலவகைப் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். மதிலை யொட்டி உட்புறத்திலுள்ள மேடைக்கு அகப்பா என்று பெயர்.

பகைவர் வரவைத் தொலைவிலேயே காணும்படி, புறமதிலின் மேல் பல திசையிலும் அட்டாலை என்னும் காவற் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து காவல் செய்வார்க்கு அட்டாலைச் சேவகர் என்று பெயர். ஒவ்வொரு மதிலுக்கும் காவலரும், மதில நாயன் என்னும் காவல் தலைவனும் இருப்பர்.

மதிலுள்ள நகர்கள் பெரும்பாலும், கோட்டை, புரி, புரிசை, எயில், கடகம் என்னும் சொற்களுள் ஒன்றைப் பெயராகவோ பெயரீறாகவோ கொண்டிருந்தன.

(2) நிலவரண்: நிலவரண் என்பது, பகைவர் அகழி கடந்த வுடன் புறமதிலைப் பற்றாமைப்பொருட்டு அதன் புறத்து விடப்பட் டுள்ள வெள்ளிடை நிலமும்; பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது. அகத்தார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை விளைத்துக் கோடற் பொருட்டுப் புறமதிலின் உட்புறமாக விடப் படும் தண்ணடை நிலமும் என இருவகை.

66

'மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடைய தரண்

(42)

என்னுங் குறளில், 'மண்' என்றது நிலவரணை. பரிமேலழகர் அதற்கு வெள்ளிடை நிலமென்று சொல்லுரை கூறி, “மதிற்புறத்து மருநிலம் பகைவர் பற்றாமைப் பொருட்டு” என்று விளக்கவுரை கூறியிருப் பதையும்; "நாடுகண்டன்ன கணைதுஞ்சு விலங்கல்” என்னும்

"