உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படையும் பாதுகாப்பும்

51

பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) "நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற் போன்ற...இடைமதில்," என்று அந் நூலின் பழைய வுரையாசிரியர் விளக்க முரைத்திருப்பதையும் காண்க.

(3) நீரரண்: நீரரண் என்பது, புறமதிற் புறத்து ஆறுங் கடலுமாகிய இயற்கை நீர்நிலையாகவும், அகழி அல்லது கிடங்கு என்னும் செயற்கை நீர்நிலையாகவும் இருக்கும் அரண்.

(4) காட்டரண்: காட்டரண் என்பது, படைமறவர் பகைவர்க்குத் தெரியாமல் மறைந்திருக்கக் கூடியதும், தொகுதியாகப் புக முடியாததுமான மரமடர் மரமடர் சோலை, சோலை, இது பொதுவாக மலையடுத்திருப்பது.

(5) மலையரண்: மலையரண் என்பது, மக்கள் தொகுதியாக ஏறமுடியாததும், மேலிருந்து பெருங்கற்களைக் கீழே எளிதாக உருட்டக் கூடியதும், உச்சியில் போதிய உணவும் உறையுளும் உடையதுமான, பறம்புபோலும் தனிக் குன்று. இது குறுநில மன்னர்க்கு அவருள்ளும் குறும்பரசர்க்கு - இன்றியமையாதது. சங்ககாலத்துக் குறுநில மன்னர், பெரும்பாலும், ஒவ்வொரு மலைக் கிழவராயிருந்தனர்.

தலைநகர்களில், இராக்காலத்தில். ஊர்காவலர் யாமந்தோறும் பறையறைந்து விளக்குடன் சென்று, கள்வர் களவு செய்யாதபடி காவல்செய்து வந்தனர்.

பெருநாட்டுக்காப்பு: நிலைப்படைகள், தலைநகரிலும் பிற கோநகர்களிலும் கலகம் நேரும் இடங்களிலும், பகையச்சமுள்ள எல்லைப்புறங்களிலும் நிறுத்தப் பெற்றிருக்கு மென்பது முன்னரே கூறப்பட்டது.

நாட்டின் பலவிடங்களிலும், பகைவர் வரவைப் பார்த்தறியக் கூடிய உயர்ந்த பார்வலிருக்கைகள் இருந்தன.

அரசனுடைய நூற்றுக்கணக்கான (அல்லது ஆயிரக்கணக் கான) ஒற்றர், பிறவரசர் தலைநகர்களில் இரவும் பகலும் கரந்த கோலத்துடன் திரிந்து, அங்கு நடப்பவற்றை உடனுடன் அரசனுக்கு மறைவாகத் தெரிவித்து வந்தனர். சேரன் செங்குட்டுவன், தன் வடநாட்டுச் செலவை முன்னதாக வடநாட்டரசர்க்குத் தூதர் வாயிலாய்த் தெரிவிக்கக் கருதியபோது அழும்பில்வேள் என்னும் அமைச்சன், “இந் நாவலந்தீவில் நமக்குப் பகைவராயுள்ள அரச ருடைய ஒற்றரெல்லாம், இவ் வஞ்சிமா நகரில் நீங்காதுறைவர். அவ்