உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

பழந்தமிழாட்சி

வொற்றரே நம் செலவை அவ் வரசரிடம் தெரிவித்து விடுவராதலின், அவர்க்குத் தூதர் வாயிலாய்த் திருமுகம் விடுக்க வேண்டா. இந் நகரிற் பறையறைந்து விளம்பரஞ் செய்தலே போதுமானது,” என்று கூறியது கவனிக்கத்தக்கது.

அரசனுடைய வேலைக்காரரும் படைத்தலைவரான சிற்றர சரும் பெருநாடு முழுதுமிருந்தமையின், பகைவர் வரவையறிந்த வுடன் படைதிரண்டு எவ்விடத்திலும் போர் செய்து நாட்டைக் காத்துக் கொள்ளற்கு வசதியாயிருந்தது.