உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9 ஆட்சிமுறை

அரசவொளி: பண்டைத் தமிழாட்சியில், அரசனே நாட்டிற்குத் தனி நாயகமாயிருந்தான். பெரும்பாலும், அவன் இட்டது சட்டமும் வைத்தது வரிசையு மாயிருந்தது. முழு நிறைவான தலைமையும் உடன் கொல்லும் அதிகாரமும் அவனுக் கிருந்ததால், அவன் குடி கள் யாவராலும் கண்கண்ட தெய்வமாகவே கருதப்பட்டான். 'திருவாக்கிற்கு எதிர்வாக்குண்டோ?', 'அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்' என்னும் பழமொழி கள் அரசனுக்கிருந்த அதிகார வலியையுணர்த்தும்.

அரசனுக் கின்றியமையாதவரும் அவனுக் கடுத்தபடியாய் அதிகார முடையவருமான அமைச்சர் படைத்தலைவரும், அவனை மிக அணுகாது தீக்காய்வார்போல் ஒதுங்கி யொழுகினர். அவன் முன்னிலையில், பிறரொடு பேசாமையும் நகாமையும் சாடை காட்டாமையும், அவனைச் சுட்டாமையும், அவன் பிறரொடு மெல்லப் பேசுவதை உற்றுக் கேளாமையும், அவனொடு பயில்வார் போற்றிக் காக்கவேண்டிய ஒழுக்க நெறிகளாகும். அரசனிடத்தில் ஒன்றைக் கூறுவோர் அவனை வாழ்த்தியே கூறுவதும், அவனைக் காணும்போதும் அவனைவிட்டுப் பிரியும் போதும் பெருமக்கள் தலை வணங்கியும் பொதுமக்கள் நிலத்தில் விழுந்தும் கும்பிடுவதும் வழக்கம்.

அரசவுடைமைகள் தெய்வவுடைமைகள் போல் திருவென் னும் அடைமொழி பெற்ற பெயராலும், அரசவினைகள் தெய்வ வினைகள் போல் அருள் என்னும் துணைவினை கொண்ட வினைச் சொல்லாலும் குறிக்கப்பட்டன.

அரசன் அமைச்சரொடும் படைத்தலைவரொடும் சூழ்ந்து வினைசெய்வது வழக்கமாயிருந்ததேனும், அவன் விரும்பியதை நிறைவேற்றற்கு எதுவுந் தடையாயிருந்ததில்லை. தலைமை அமைச்சனுக்கும் படைத்தலைவனுக்குங் கூட, அரசனால் வினவப் பட்ட காரியத்தைப்பற்றி அவர் தம் கருத்தைத் தெரிக்கும் உரிமையே