உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆட்சி முறை

61

எழுதப்பட்ட வற்றையும் பட்டிகை பட்டம் என்பன செப்பேட்டில் எழுதப்பட்டவற்றையும், பிற இரண்டையும் குறிக்கும்.

நிலவிற்பனை யாவணத்திற்கு விலையாவணம், விலை யோலை, விலைத்தீட்டு என்னும் பெயர்களும், ஆள்விற்பனை யாவணத்திற்கு ஆள்விலைத்தீட்டு, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமையோலை என்னும் பெயர்களும் வழங்கின. அடை மான ஆவணம், ஒற்றிக்கலம் ஒற்றிக்கரணம் ஒற்றிநறுக்கு அடை யோலை என்றும்; அடைமானம் வாங்குபவன் எழுதிக்கொடுத்த ஓலை, எதிரடையோலை யென்றும் பெயர் பெற்றிருந்தன. நுகர்ச்சியொடு கூடிய ஒற்றிக்கு இறங்கொற்றி அல்லது அடைப்பு (Usu-Fructuary mortgage) என்றும், நிலையான ஒற்றிக்கு உறாவொற்றி (Irredeemable mortgage) என்றும், பெயர். தீட்டுக்காரனால் (Notary) எழுதப்படாத அல்லது பதிவு செய்யப்படாத ஒற்றிக்கலம் கையொற்றி எனப்பட்டது. குத்தகைத் தவணை முடிந்தவுடன் அதன் தீர்வுபற்றி எழுதப்படுவதற்கு அறுதிமுறி (Cancelled lease-deed) என்றும், ஒரு பொருளின் உரிமை குறிப்பிட்ட ஒருவர்க்கன்றிப் பிறருக் கில்லை யென்று குறிக்கும் எழுத்தீட்டிற்கு விடுதீட்டு அல்லது தீர்வுமுறி (Release-deed) என்றும் பெயர். ஒருவர் ஒன்றற் குடம்பட்டு எழுதித் தரும் சீட்டு, இசைவுத் தீட்டு இசையோலை ஒப்புமுறி என்னுஞ் சொற்களுள், ஒன்றாற் குறிக்கப்பெற்றது. ஒருவர் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக எழுதித்தரும் சீட்டிற்குப் பற்றுமுறி (Receipt) என்று பெயர். நிலவாரச் சாகுபடியாவணம்(Deed of lease for -cultivation) காணிப் பிடிபாடு எனப்பட்டது.

விலையாவணம் ஒழிந்த பிறவற்றுள் பெரும்பாலன, இன்றியமை யாது ஆவணக்களரியிற் பதிவுசெய்யப்பட வேண்டுந் திறத்தனவல்ல.

பொதுவகையான ஆவணங்கள் ஓலையிலும். சிறப்பானவை செப்பேட்டிலும், எழுதப்பெறும், ஊராருக்குத் தெரியவேண்டிய ஆவணமாயின், கல்லில் வெட்டப்பெறும்.

அறங்கூறவையத்தார் செயல்: நகரங்களிலிருந்த அறமன்றத் தார், வழக்காளி (Plaintiff) எதிர் வழக்காளி (Defendant) ஆகிய இருவரின் சொல்லையும் பலமுறை கேட்டுக் கரியும் (witness) சான்றும் (evidence) இருப்பின் அவற்றைக் கொண்டும், அவையில்லாவிடின் நூலுத்தி பட்டறிவு (சுருதி யுக்தியனுபவம்) கொண்டும், நடுநிலைமையாய்த் தீர்த்து முறைசெய்து வந்தனர்.

"இருவர்தம் சொல்லையும் எழுதரங் கேட்டே

என்று அதிவீரராம பாண்டியனும்,

""