உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

பழந்தமிழாட்சி பாலும் தலையிடவில்லை. கூட்டூரைச் சேர்ந்த எல்லாவூர்கட்கும் பொதுவான செய்திகளையும் சிற்றூர்ச் செய்திகளில் ஊர்த்தலைவன் அதிகாரத்திற்கு மேற்பட்டவற்றையுமே, ஊர்ச்சபையார் கவனித்து வந்ததாகத் தெரிகின்றது.

உத்தமச்சோழன் காலத்தில், தொண்டை நாட்டைச் சேர்ந்த சிற்றியாற்றூரில் பிரமதேயமாகக் கொடுக்கப்பட்ட ஒரு நிலத்தைப் பற்றிய அரச ஆணையோலையில், அடிகள் நக்கன் என்னும் பவ்வத்திரி கிழவன் (பவ்வத்திரியூர் தலைவன்) உடன்கூட்டத்த திகாரிகளுடன் சேர்ந்து கையெழுத்திட்டதாலும், ஊர்த்தலைவனு டைய ஊழியத்திற்காக அம்பலமானியம் என்னும் இறையிலி நிலம் விடப்பட்டிருந்த தினாலும் சிற்றூர்த் தலைவன் பதவி அரசனால் ஒப்புக்கொள்ளப் பட்டிருந்ததை அறியலாம்.

சிற்றூர்த் தலைவனுக்கு ஊராட்சியில் உதவுவதற்கு, சிலவூர்களில், துணைத்தலைவனொருவனும் கரும மாற்றுவோ னொருவனும், சேவகனொருவனுமாக மூவர் இருந்தனர். ஒவ்வோர் ஊர்க்கும், நீர்ப்பாய்ச்சி யொருவனும் குடிகாவல் என்னும் ஊர்காவலன் ஒருவனும் இருந்தனர்.

ஊர்வழக்குக்களைத் தீர்ப்பதற்கும் ஊரில் சட்டதிட்டங் களை ஏற்படுத்தற்கும் ஊர்த்தலைவன் கூட்டும் கூட்டம், ஊர் மண்டபத்தி லாவது, ஒரு மரத்தடியிலாவது வெள்ளிடையிலாவது நடைபெறும்.

ஆவணக்களரியார்செயல்:

ஆள்நில ஊர்தொறும்

ஆவணக்களரி யிருந்தது. ஒரு நிலத்தை விற்பவனும் கொள்பவனும், அல்லது அடைமானம் வைப்பவனும், வாங்குபவனும், அல்லது குத்தகைக்கு விடுபவனும் எடுப்பவனும், தம்முள் இசைந்து எழுதிய ஆவணத்தை ஆவணக்களரிக் கெடுத்துக் கொண்டுபோய், களரியார் முன் தாம் இருவரும் இசைந்துகொண்டதாக உறுதிமொழி கூறியபின் ஆவணம் களரியாரால் காப்பிடப்பெறும், காப்பிடுதல் என்பது அரச முத்திரையிட்டுப் பதிவு செய்தல்.

ஆவணத்திற்கு ஏடு, ஓலை, கரணம், கலம், சீட்டு, செய்கை. தீட்டு, நறுக்கு, பட்டிகை, பட்டயம், முறி முதலிய பிற சொற்களும், அவ்வவ் வினைக்கும் எழுதப்பட்ட கருவிக்கும் ஏற்ப வழங்கின. ஆயினும், அவற்றை யெல்லாம் தழுவுவதும், அதிகார எழுத்துச் சான்றைச் சிறப்பாகக் குறிப்பதும், ஆவணம் என்னும் சொல்லே. பத்திரம் பிராமணம் என்னும் வடசொல் வழக்கு பிற்காலத்ததாகும். ஓலை சீட்டு நறுக்கு முறி என்னும் சொற்கள் பனையோலையில்