உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருளாதாரம்

67

இக்காலத்துத் தொழில்வரி யெனப்படும் ஒன்றே, அக்காலத் துத் தாழில் தொறும் கருவிதொறும் வெவ்வேறு பெயர்பெற்று நூற்றுக்கணக்கான வரிபோல் தோன்றிற்று. ஆயினும், சங்ககாலத்து வரிகளினும், பிற்காலத்து வரிகள், மிகப் பலவென்றும், இக்காலத் திலில்லாத ஆள்வரி மணவரி துலாபாரவரி முதலிய சில விதப்பு வரிகள் அக்காலத் திருந்தன வென்றும் அறிதல்வேண்டும். ஆள்வரி சோழநாட்டில் முன்னியூர் தவிரப் பிறவூர்களில் கூனர் குறளரிடத்தும் வாங்கப்பட்டதாகத் தெரி கின்றது.

வரிப் பாகுபாடு: வரிகளெல்லாம், வரிகளெல்லாம், கீழிறைப்பாட்டம் (சிறுவரி) மேலிறைப்பாட்டம் (பெருவரி) என இரு பாலாய்ப் பகுக்கப்பட்டிருந்தன. ஊர்க்கழஞ்சு குமரக்கக்சாணம் வண்ணாரப் பாறை தட்டாரப் பாட்டம் முதலியன கீழிறைப் பாட்டமும், வேலிக்காசு திங்கள் மேராமு முத்தாவணம் தறிப்புடவை முதலியன மேலிறைப் பாட்டமும் ஆகும்.

7

சில வரிகள் காசாகவும், சில வரிகள் கூல (தானிய ) மாகவும், சில வரிகள் அவ் விரண்டிலொன்றாகவும் செலுத்தப்பட்டன. காசாகச் செலுத்தப்பட்டவை காசாயம் (காசு கடமை) என்றும் அந்தராயப் பாட்டம் என்றும், கூலமாகச் செலுத்தப்பட்டவை மேலடியென்றும் பெயர்பெற்றன. காசு பணம் பொன் காணம் என இறும் பெயர்களெல்லாம் முன்வகையையும், அரிசி நெல் நாழி குறுணி பதக்கு என இறும் பெயர்களெல்லாம் பின் வகையையும் குறிக்கும். பெரும்பாலும் தொழில்வரிகள் பணமாகவும். நிலவரி இனமாகவும் செலுத்தப்பட்டன. செக்கிறை தறியிறை கடைவரி முதலியன ஆண்டுக்கு ஆறு பணமாகும்.

சந்தை அங்காடி தெரு திருவிழா முதலியவற்றில் பலவகைப் பொருள்கள் விற்கும் சில்லறைக் கடைகட்கு நாள்வரி வாங்கப் பட்டது.

நாடு முழுமைக்கும் பொதுவான செலவிற்குரிய வரிகள் குடிகளெல்லாரிடத்திலும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் பயன்படும் அல்லது பயன்படுவதாகக் கருதப்படும் செலவிற்குரிய வரிகள் அக் குறிப்பிட்ட இடத்திலும் தண்டப்பட்டன.

அரசனால் விதிக்கப்பட்டவும், ஊரவையாரால் விதிக்கப்பட் டவும், அறமன்றத்தாரால் விதிக்கப்பட்டவும் கோயிலதிகாரிகளால் விதிக்கப்பட்டவும், சிற்றூர்த் தலைவனால் விதிக்கப்பட்டவும் ஆக ஐவேறு தொகுதிப்பட்டிருந்தன அக்காலத்து வரிகள். அரசனுக்குச் செலுத்த வேண்டியவை அரசிறையெனப்பட்டன.

  • H.A.I.S.I