உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டமாற்றுங் காசும்

79

கடைத்தர நாணயங்கள் செம்பாகவும் இருந்தன. இங்ஙனம் தங்க நாணயம் தலைமை நாணயமும் (Principal coin), வெள்ளி செப்பு நாணயம் சில்லறை நாணயமும் (Subsidiary coin) ஆயின.

மூவகை யுலோக நாணயங்களும் முதலாவது ஒரே நிறையுள்ள னவாயிருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர்.

காசு பொன் கழஞ்சு மாடை (மாழை) எனப் பலதரமாய் வழங்கிய பொன் நாணயங்களுள், உயர்ந்தவையெல்லாம் ஒவ்வொன் றாய் நீங்கி, இறுதியில் காசு ஒன்றே எஞ்சியிருந்ததாகத் தெரிகின்றது. பொன் நாணய அளவிலேயே வெள்ளி செப்பு நாணயங்களும் அடிக்கப்பட்டு, அவையும் அவற்றோடொத்த நிறையுள்ள பொன் நாணயம் போன்றே காசு கழஞ்சு மாடை என வழங்கி யிருக்கின்றன!

மூவகை யுலோகக் காசுகளும் 14 குன்றிமணியிலிருந்து 72 குன்றிமணிவரை பல்வேறு எடையுள்ளனவாக வழங்கியிருப்பதால், ஒவ்வோர் உலோகத்திலும், பெருங்காசும் அதன் பகுதிகளான சிறு காசுகளும் வழங்கியிருந்தமை ஊகிக்கப்படும். இனி, ஒரே தரக் காசு வெவ்வேறரசர் காலத்தில் வெவ்வேறு நிறையுள்ள நிறையுள்ளதா யிருந்திருப்பதால், அவ்வவ்வரசர் காலத்து உலோக இருப்பிற்குத் தக்கபடி, காசுகளின் எடை ஏறியும் இறங்கியும் வந்ததாகத் தெரி கின்றது.

போர்க் காலத்தில் அரசனால் அடிக்கப்பட்ட பொற்காசு களிலும், பொதுவாகப் பொற்கொல்லரால் திருட்டுத்தனமாய் அடிக்கப்பட்ட பொற்காசுகளிலும் செம்பு கலந்திருந்ததினால், அவற்றை மக்கள் வாசி பெற்றே வாங்கினர். அவை வாசிபெற்ற காசுகள் எனப்பட்டன. வாசியாவது, கலவைப் பொற்காசிற் கலந்துள்ள செம்பிற்காக வாங்கப்பட்ட வட்டம், தூய பொற்காசு 'நற்காசு' எனப்பட்டது.

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்த மூர்த்தியாரும் திருவீழி மிழலைத் திருக்கோயிலிற் பெற்ற காசுகளும், முன்னவர் பெற்றது நற்காசும் பின்னவர் பெற்றது கலப்புக் காசுமாயிருந்தன. கலப்புக் காசிற்கு வாசி வாங்கப்பட்டது. அதனால், சம்பந்தர்

"வாசி தீரவே - காசு நல்கிடீர்- மாசின் மிழவையீர்

- ஏச லில்லையே,”

என்னுந் திருப்பதிகம் பாடி நற்காசு பெற்றார்.

1. பணம் என்னும் வெள்ளிக்காசும் துட்டு என்னும் செப்புக்காசும் பிற்காலத்தன போலும்.