உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

பழந்தமிழாட்சி

என்றும், அதில் வினைசெய்யும் தட்டார்க்கு அஃகசாலையர் என்றும், அச்சாலையும் அவரும் இருந்த தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்றும் பெயர் வழங்கின. அஃகம் என்பது காசு என்னும் நாணயத்தில் பன்னிரண்டிலொரு பாகம் என்றும், காசு என்பது பதினான்கு குன்றிமணி எடையுள்ள தென்றும் சொல்லப்படும். 'அஃகமுங் காசும் சிக்கெனத் தேடு' என்னும் பழமொழியினால், இவ்விரு காசுகளும் பெரு வழக்காய் வழங்கினமை அறியப்படும்.

மூவேந்தரும் தத்தம் முத்திரையிட்ட காசுகளையே தத்தம் நாட்டில் அரசியல் நாணயமாக வழங்குவித்தனர். அவற்றின் முத்திரை தவிர வேறொன்றும் பொறிக்கப்படவில்லை. அவை சேரன்காசு சோழன்காசு பாண்டியன்காசு என வழங்கின. அவை அளவில் சிறிது வேறுபட்டிருந்ததாகத் தெரிகின்றது. பாண்டியன் காசுகளுள் சிலவற்றில் ஒரு மீனும், சிலவற்றில் இரு மீனும், சிலவற்றில் மும்மீனும் பொறிக்கப்பட்டிருந்தன.

அக்காலத்து நாணயங்கள், பொன்னாலியன்றனவாகவும், உலோக மதிப்பாகிய (Bullion value) அகமதிப்பும் (Intrinsic value) அரசியல் மதிப்பாகிய புறமதிப்பும் (Face value) ஒத்தனவாகவும் இருந்ததினால் தமிழகத்தார் மட்டுமன்றிப் பிற நாட்டாரும் விழுச்செல்வமாக விரும்பி யேற்கும் நிலையிலிருந்தன.

சங்கக்காலத்திற்குப் பிற்பட்ட நாணயத்திட்டம்

தமிழரசர் காசுகள்: அளவிறந்த பொற்காசுகள் கொடை வகையிற் கொடுக்கப்பட்டுவிட்டதனாலும், அணிகலம் தெய்வச்சிலை அம்பல முகடு தட்டுமுட்டு முதலிய பலவகையில் இட்டுவைக்கப் பட்ட பொன்முதல் முழுகிய முதலாய் (Sunk capital) இருந்ததினாலும், பற்பல இடங்களில் பெருந் தொகையான பொற்காசுகள் மக்கட்குத் தெரியாதபடி மண்ணிற் புதையுண்டு கிடந்ததினா. கிடந்ததினாலும், பிற நாட்டரசர் அடிக்கடி கொள்ளை கொண்டும் திறைகொண்டும் சென்றதினாலும், வரவரப் பொன்விளைவு சிறுத்தும் மக்கட் டொகை பெருத்தும் வந்ததினாலும், சங்ககாலத்திற்குப் பின்பு நாணயச் செலாவணிக்குப் போதிய பொன் கிட்டாமையால், கீழ்த்தர நாணயங்கட்கு முதலாவது வெள்ளி பயன்படுத்தப்பட்டது. அன்று இரட்டை நாணயத்திட்டம்(Bimetallism) ஏற்பட்டது. சிறிது காலத்தின்பின் வெள்ளியும் அருகிவரவே, கடைக்கீழ்த்தர நாணயங் கட்குச் செம்பு பயன்படுத்தப்பட்டது. அன்று முக்கை நாணயத் திட்டம் (Trimetallism) ஏற்பட்டது. அதில், தலைத்தர நாணங்கள் பொன்னாகவும், இடைத்தர நாணயங்கள் டைத்தர நாணயங்கள் வெள்ளியாகவும்,