உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டமாற்றுங் காசும்

77

பிற தாதுக்கள் கிடைக்கப்பெற்றுப் பொன் அருகிவந்த போது, நாணயப் பொற்கட்டிகள் பல, நாளடைவில், அராவி யெடுக்கப்பட்டு எடை குறைந்தும் செம்பு கலந்து மாற்றுத்தாழ்ந்தும் போயின. அதனால், அரசியலதிகாரிகளும் நகர வணிகர் குழாங்களும், நாணயக் கட்டிகளை யெல்லாம் உரைத்தும் நிறுத்தும் நோட்டஞ் செய்து, அவற்றுள் மாற்றும் நிறையும் சரியாயுள்ளவற் றிற்கு முத்திரையிட வேண்டிய தாயிற்று. அங்ஙனம் முத்திரையிடு வதற்குக் கட்டி வடிவினும் வடிவம் ஏற்றதாதலின், முத்திரை நாணயங்களெல்லாம் நாளடைவில் தகட்டு வடிவு பெற்றுவிட்டன. முத்திரையும் தகட்டு வடிவுமே நாணயத்திற்கு முதன்மையான இயல்களாதலின், முத்திரை பெற்ற நிலையைக் காசு நாணயத் தொடக்கம் எனக் கூறலாம்.

தகட்டு

அன்றே யமைந்த பசும் பொன் அடர் ஆறுகோடி குன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்தன் என்பான்

(சீவக.1973) என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதியில் வந்துள்ள பொன் அடர் என்பதைத் தகட்டுப்பொன் என்பர் நச்சினார்க்கினியர். அடர் என்பது தகடு

கடைச் சங்க காலத்தில், பண்டமாற்று, கட்டி நாணயம், காசுநாணயம் ஆகிய மூவகை முறைகளும் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. கழஞ்சு மாழை என்பன கட்டிநாணயமாகவும், அஃகம் காணம் காசு பொன் முதலியவை காசு நாணயமாகவும் இருந்தன போலும். தனியுடைமை நாட்டிலெல்லாம், நாட்டுப்புறச் சிற்றூர்ச் சில்லறை விற்பனையில் பண்டமாற்று என்றுங் கையாளப் பெறும்.

சங்க காலத்தில், வெள்ளி செம்பிரும்பிருந்தும் தமிழகத்து நாணயங்களெல்லாம் தங்கத்தினாலேயே இயன்று, எத்தொகைக் கும் செலாவணி யுள்ளனவா யிருந்ததினால், அக்கால நாணயத் திட்டத்தை (Currency Standard) ஒற்றையுலோகத் திட்டம் (Mono- metallism) என்றும்; தங்க நாணயத் திட்டம் (Gold-Standard) என்றும், நிறை செலாவணிச் சட்ட நாணயத் திட்டம் (Unlimited legal tender) என்றும் கூறலாம்.

புலவரும் புலத்தியரும் இலக்கக்கணக்கான காணமும், காசும், பாணரும் ஆடியன்மகளிரும் ஆயிரத்தெண் கழஞ்சு கடைச்சங்க காலத்துப் பொன் நாணயங்கள் நிறை செலாவணி யுடையனவா யிருந்தமை அறியப்படும்.

அரண்மனைக்கு அணிகலம் செய்யும் தட்டாரே பொற்காசு களையும் அடித்துவந்தனர். காசடிக்கும் இடத்திற்கு அஃகசாலை