உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

பண்டமாற்றுங் காசும்

சங்ககால

நாணயத்திட்டம்:

உலகமெங்கணும் முதற்

காலத்தில், பொருட்பரிமாற்றெல்லாம் பண்டமாற்று (Barter) முறையிலேயே நடந்து வந்தது. அதன்பின் படிப்படியாகக் காசு (நாணயம்) என்னும் பரிமாற்றுக் கருவி ஏற்பட்டது.

பிற நாடுகளில், நாணயம் முதலாவது கல்லுங் கவடியும் காட்டையும் தோல்துணுக்கும் போன்ற உலக மதிப்பற்ற குறிப் பொருளாயிருந்து, பின்பு தாது (உலோக)ப் பொருளாக மாறியது. தமிழகத்தில் ஏராளமாய்ப் பொன் விளைந்ததினாலும், பழங்காலத் திலேயே தமிழர் நாகரிக மடைந்திருந்ததினாலும், தமிழர் தொடக்கத் திலேயே தாதுக்களிற் சிறந்த பொன்னைக் காசாகப் பயன்படுத்தினர்.

தமிழர் முதன்முதற் பயன்படுத்திய தாது பொன்னாயிருந்த தினாலேயே பொன் என்ற சொல்லிற்கு உலோகம் என்னு பொருளும், பிற்காலத்திற் கிடைத்த வெள்ளி செம்பிரும்பிற்கு முறையே வெண்பொன் செம்பொன் கரும்பொன் என்ற பெயர்களும் தோன்றின.

உலக மதிப்புள்ளதும், உறுதியானதும், எளிதாய் இடம் பெயர்க்கக்கூடியதும், சிறு மதிப்பையும் பெரு மதிப்பையுங் குறிக்கச் சிறிதாகவும் பெரியதாகவும் வெட்டப்படக் கூடியதும், அங்ஙனம் வெட்டப்படினும் தன் அளவிற்குரிய மதிப்பிழக்காததும், உருக்கி வேண்டியாங்கு வடிவுறுத்தக் கூடியதும், பொன்னே யென்று தமிழர் கண்டுகொண்டதினால் அதனையே பரிமாற்றுக் கருவியாகப் பயன்படுத்தி வந்தனர்.

ஆயினும், முதலடியிலேயே, பொன் இப்போதுள்ள காசாக முத்திரையிட்ட தகட்டு வடிவம் பெறவில்லை. அது சிறிதும் பெரிது மான கட்டியாகவே (Bullion) முதலாவது வழங்கிவந்தது.அக் கட்டிகள், கொட்பயறு (காணம்), குன்றிமணி, மஞ்சாடிவிதை, கழற்சிக்காய் (கழங்கு) முதலிய பல பொருள்களின் நிறைகளுள்ள னவாயிருந்தன. அவற்றைக் கட்டிநாணயம் என்னலாம்.