உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டமாற்றுங் காசும்

81

925)திருப்புத்தூரிலுள்ள ஒரு பார்ப்பனியார் அவ்வூர்க் கோயிலில் ஒரு விளக்கேற்றுதற்கு 10 தினாரம் 3(ரோமப் பொற்காசு), அளித்தனர். சடாவர்மன் குலசேகர பாண்டியன் (1190-1217), தன் பெயர் தாங்கிய குளம் ஒன்றை ஆழமாக்குதற்கு 100 திரம்மம் (கிரேக்கப் பொற்காசு) கொடுத்தான். இதனால் யவனக் காசுகள் அரசராலும் வழங்கப்பட்டமை அறியலாகும்.

ம்

பல்லவர் மேம்பட்டிருந்த இடைக்காலத்தில், அவருடைய காளை முத்திரையும் விளக்கு சக்கரம் முதலிய பிற குறிகளும் பொறிக்கப்பட்ட காசுகள், சோழநாடு முழுமையும் பரவியிருந்தன.

12ஆம் நூற்றாண்டில் வீரபாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடந்த உள்நாட்டுப் போரில், முன்னவனுக்குத் துணையாயிருந்த முதலாம் பராக்கிரமபாகு என்னும் இலங்கை யரசனுக்குப் பாண்டிநாட்டில் ஏற்பட்ட ஆதிக்கத்தினால், அவனது காகப் பணம் என்னும் ஈழக்காசு சிறிதுகாலம் தென்னாட்டில் வழங்கிற்று. அது சதுரமானதும், 72 அல்லது 73 குன்றிமணி எடையுள்ளதும், ஒரு முரட்டு மாந்தன் ஒரு புறத்தில் நிற்பதும் ஒரு புறத்தில் இருப்பதும் போலப் பொறித்ததும், அரசு (போதி) யானை சக்கரம் கும்பம் முதலிய உருவங்களைக் கொண்டதுமான செப்புக் காசாகும்.

சாளுக்கியர்க்குத் தமிழ்நாட்டின் வடபாகத்தில் செல்வாக் கேற்பட்ட பிற்காலத்தில், அவர்களது வராக முத்திரை கொண்டதும் 31/2 ரூபா மதிப்புள்ளதுமான வராகன் என்னும் பொற்காசு, தமிழ்நாடு முழுமையும் வழங்கிற்று.

14ஆம் நூற்றாண்டில், டில்லியிருந்து ஆண்ட டோக்ளாக் (1325-50) என்னும் முகமதியப் பேரரசனின் 'தங்கர்' என்னும் செப்புக்காசு, தென்னாடுவரை வழங்கியதாகத் தெரிகின்றது.

இங்ஙனம், இறுதிக்காலத்தில், மூவேந்தர் காசுகளிடையே வேறு பல்லரசர் காசுகளும் விரவி வழங்கியிருந்திருக்கின்றன.

3. Denarius

4. Drachma