உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

97

ஈரோஜு படவலு ரெண்டு கண்ட்டலதாகா உண்டக, த்வரகா வெள்ளிப் போயினவி = இன்றைக்குப் படகுகள் இரண்டு மணி

வரைக்கும் இராமல் சுருக்காய்ப் போய் விட்டான்.

வர்த்தகமுவல்ல மீக்கு சாலா லாபமு கலுகுத்துன்னதா? வாணிகத்தால் உமக்குச் சாலவும் ஊதியம் பெருகுகிறதா?

ஒரு கதை (பார்ப்பனியும் கீரிப்பிள்ளையும்)

"ஒக்க ஊரிலோ ஒக்க ப்ராஹ்மணுடு கலடு. அதனிவத்த ஒக்க முங்கி உண்டெனு. அதடு தான்னி பஹுஜாக்ரதகா பெஞ்ச்சுதூ உண்டெ ஒக்கநாடு அதனிகி ஒக்க ஊரிகி போவலசின பனி வச்சினதி, கனுக, ஆ முங்கினிதனபாந்யக்கு ஒப்பகிஞ்சி போயெனு, மருநாடு மெதன பிட்டனு தொட்லலோ நித்ரபுச்சி,ஆ முங்கினி தொட்லதகிர காவலி உ ஞ்ச்சி. நீள்லு தோடுகொனி ராவடானக்கு வெள்ளிதி. அந்தலோ பிட்ட நித்ரிஸ்தூ உண்டே தொட்லவத்திக்கி ஒக்க பாமு வச்செனு, ஆ முங்கி ஆ பாமுனு பட்டி துண்டெமுலு சேசி பாரவேசி, ஜரிகின சங்கதி தல்லிக்கி தெலியச் சேயடானக்கு ஆமெவத்திக்கி வெள்ளினதி. அப்புடு ஆமெ முங்கி மூத்திக்கி அண்டுக்கொனி உன்ன நெத்துரு சூச்சி, அதி தன பிட்டனு கரிச்சி சம்பினதி அனி தலஞ்ச்சுகொனி, ஆ முங்கினி கொட்டி சம்பெனு, தருவாத்த இண்டிக்கி போயி, தொட்லலோ சுகமுகா நித்ரபோத்தூ உன்ன பிட்டனுன்னு தொட்லவத்த முங்கி பட்டி சம்பின பாமுனுன்னு சூச்சி, சாலா துக்கப்படெனு.'

>>

இதன் மொழிபெயர்ப்பு - ஓர் ஊரிலே ஒரு பார்ப்பனன் இருந்தான் . அவனிடம் ஒரு மூங்கா (கீரி) இருந்தது. அவன் அதை மிக விழிப்பாய் வளர்த்திருந்தான். ஒரு நாள் அவனுக்கு ஓர் ஊருக்குப் போகவேண்டிய பணி (வேலை) வந்தது. ஆகையால் அம் மூங்காவைத் தன் மனைவியிடம் ஒப்புவித்துப் போயினான். மறுநாள் அவள் தன் பிள்ளையைத் தொட்டிலிலே தூங்க வைத்து, அம் மூங்காவைத் தொட்டிற் பக்கம் காவல்வைத்து நீர் (தண்ணீர்) இறைத்துக்கொண்டு வருவதற்குப் போனாள். அதற்குள், பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தபோது தொட்டிற் பக்கம் ஒரு பாம்பு வந்தது. அம் மூங்கா அப் பாம்பைப் பற்றி (பிடித்து)த் துண்டஞ்செய்து போட்டுவிட்டு நடந்த செய்தியைத் தாய்க்குத் தெரியப்படுத்துவதற்கு அவளிடம் போனது. அப்போது அவள்