உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

திரவிடத் தாய் மூங்காவின் மூஞ்சியில் ஒட்டிக்கொண்டிருந்த நெய்த்தோரை (அரத்தத்தை)ப் பார்த்து, அது தன் பிள்ளையைக் கடித்துக் கான்றுவிட்டது என்று நினைத்துக்கொண்டு, அம் மூங்காவை அடித்துக் கொன்றுவிட்டாள். பிறகு, இல்லத்திற்குள் போய்த் தொட்டிலிலே நலமாய்த் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையையும், தொட்டிற் பக்கம் மூங்கா பற்றிக்கொன்ற பாம்பையும் பார்த்துச் சாலவும் வருந்தினாள். (உஞ்ச உண்டு என்பதன் பிறவினை. உன்ன = உள்ள).

தெலுங்குத்திரிபு விளக்கம்

தமிழுக்கும் தெலுங்குக்கும் பல சொற்கள் பொதுவாயிருப் பினும், அவற்றுள் எது எதினின்று வந்ததென்று ஆராய்ச்சியில்லாத தார்க்குத் தோன்றாதிருக்கலாம். ஒரு சொல்லின் இரு மொழி வடிவங் களின் பொருளையும் வேரையும் ஆராயின், எது இயற் (Primitive) சொல் எது திரி (Derivative) சொல் என்று அறிந்துகொள்ளலாம்.

வெண்ணெய் (வெள்+நெய்) என்பது தமிழில் வெள்ளையான நெய் என்று பொருள்படுவது. இதன் திரிபான வென்ன என்னும் தெலுங்குச்சொல் இப் பொருளைத் தருவதன்று. தம்முன் (அண்ணன்) என்பதற்கு எதிராகத் தமக்குப்பின் பிறந்தவனைத் தம்பி என்றனர். அது தம்பி என உலக வழக்கில் கடைக்குறையாய் வழங்குகின்றது. ஆனால், தெலுங்கிலோ தம்முடு எனத் திரிந்து வேர்ப்பொரு ளிழந்துவிட்டது.

ஐ-அ

தெலுங்குச் சொற்கள் தமிழில் திரிந்துள்ள முறைகள் 1. எழுத்துத் திரிபு

கோணி - கோனெ; விலை- வெல; திரை - தெர.
ஊற்று - ஊட்ட; பாட்டு - பாட்ட; தட்டு - தட்ட; போக்கு

-

போக்க.

புகை - பொக; உடல் - ஒடலு; குழி - கோயி; முனை மொன; குனை - கொன; முளை - மொலி; உரை -ஒர.

பொம்ம, உவம, குளிக, குப்ப, பக, மந்த, ஒட்ட, நட, மகிம, தீர்வ, கட, குத்தக, வல, மூல, கொள்ள, மாத்ர,