உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

திரவிடத் தாய் ஒருசில வடசொற்கள் தமிழிற் கலந்த அயன்மொழி யென்ற வகையில் வடசொற்க ளென்றே கூறப்பட்டன. அக்காலத்தில் தமிழிற் கலந்த அயன்மொழி வடமொழி யொன்றே. இம் முறைப்படி இக்காலத்திலும், தமிழிற் கலந்த ஆங்கிலச் சொல் போர்த்துக்கீசியச்சொல் முதலியவற்றை அவ்வம் மொழிப் பெயரால் ஆங்கிலச் சொல் போர்த்துக்கீசியச்சொல் எனக் கூறல் வேண்டுமே யன்றித் திசைச்சொற்களெனக் கூறுதல் கூடாது. இதுபோது கிளைமொழிகளாய் அல்லது இனமொழிகளாய்ப் பிரிந்துபோயுள்ள தெலுங்கு கன்னடம் முதலியவையெல்லாம், பழங்காலத்தில் கொடுத்தமிழா யிருந்ததினாலேயே கொடுந்தமிழுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டன என்பதை மறத்தல் கூடாது. கொடுந்தமிழ்ச் சொற்கள் அல்லது திசைச்சொற்கள் மூவகைப் படும்.

அவையாவன:

(1)

(2)

(3)

பொருள் திரிந்த சொல்.

எ-டு: செப்பு (தமிழ்) = விடைசொல்; செப்பு(தெலுங்கு) = சொல்.

வடிவு திரிந்த சொல்.

-டு: போயினான் (த.) போயினாடு (தெ)

புதுச்சொல்.

எ-டு: அடுகு (தெ.) = கேள்.

புதுச்சொல்லும் மறைந்த வேர்ச்சொல் (அம்மு (தெ.) = வில்) மறையா வேர்ச்சொல் (அள்(காது)-அடுகு) என இருவகைப்படும். இங்ஙனம் மூவகைப்பட்ட திசைச்சொற்கள் மிகுந்த அல்லது கலந்த தமிழ் கொடுந்தமிழாம். தொல்காப்பியர்,

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே"

(சொல்.1)

"அவற்றுள்

இயற்சொற் றாமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாஅமை யிசைக்குஞ் சொல்லே”

(சொல். 2)

'ஒருபொருள் குறித்த வேறு சொல் லாகியும்

வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்

இருபாற் றென்ப திரிசொற் கிளவி”

(சொல்.3)