உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி'

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

என்று

யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

11

(சொல்.4)

(சொல்: 5)

கூறியிருப்பதால், நால்வகைச் சொல்லுள் வடசொல் அயற்சொல் என்பதும், திசைச்சொல் கொடுந்தமிழ் என்பதும், ஏனையிரண்டும் செந்தமிழ் என்பதும், அறியக் கிடத்தல் காண்க.

என்

று

செந்தமிழ் நிலம் "வைகையாற்றின் மேற்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்" இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலிய பிற்கால உரையாசிரியர் உரைத்தனர். இதில், வைகையாற்றின் தெற்குள்ள சிறந்த செந்தமிழ் நிலப்பகுதி விலக்கப்பட்டிருப்

பதனாலும், பழங்காலத்தில் சேரசோழ பாண்டிய முத்தமிழ் நாடுமே செந்தமிழ் நிலமாயிருந்ததினாலும், இவ் வுரை தவறாகும்.

.....

"செந்தமிழ் நாடாவது: வைகையாற்றின்

வடக்கும்,

மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வைகையாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:

"வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி

"2

என்றமையானும், இதனுள் தமிழ் கூறும்

நல்லுலகமென

விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து, வேங்கட மலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப" என்று தெய்வச்சிலையார் பிறனுடன்பட்டது தானுடன்படுதலாகக் கூறிய உரையே உண்மையானதாம்.