உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

13

குடியேறினார் போலும், பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவை யைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமையுணர்க.

66

'அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா,

எ-று;

66

குடாவடி யுளியம் என்றவழி குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழி, கரைதல் என்பது கருநாடர் விளிப் பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டு கொள்க" எனக் கொண்டு கூற்றாகத் தெய்வச்சிலையாரும் கூறியதே ஏற்ற உரையாம்.

ம்

தொல்காப்பியர் காலத்தில் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்த பழந்தீபமும் சிங்களமும் கருநடமும் வடுகும் (தெலுங்கமும்) கலிங்கமும் பிற்காலத்தில் பிறமொழி நாடுகளாய் வேறுபட்டு விட்டன. நாவலந் தேயத்திலுள்ள மொழி வேறுபட்ட நாடுகள் தமிழுட்பட மொத்தம் பதினெட்டாகக் கணக்கிடப்பட்டன. அப் பதினெட்டும் பிற்காலத்தில் ஐம்பத்தாறாய்ப் பிரிந்து போனமை புராணங் கூறும். பத்தாம் நூற்றாண்டி ல் இருந்த அல்லது அதையடுத்து இருந்த இலக்கணவுரையாசிரியர், அக்கால நிலைக் கேற்ப அற்றைத் தமிழ்நாட்டின் நடுவொழிந்த பெரும்பாகத்தைத் தொகைபற்றிய பழைய மரபை விடாமல் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளாகப் பிரித்தனர். அவற்றுள் சேர நாட்டுப் பகுதிகளான குட்டம் குடம் வேண் மலாடு என்பன உள்ளன, அக்காலத்து மலையாளமொழி தோன்றாமையின். நன்னூலார் தங்காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் தொல்காப்பியர் காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் மனத்துட்கொண்டு,

"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

என நூற்பாச் செய்தார். பதினெண் நிலங்களை,