உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

திரவிடத் தாய்

“சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்க கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் வங்கம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்ப னேழ்புதிவி தாமிவையே"

என்றும் செய்யுள் கூறும். இதிற் கூறிய சாவகம் சீனம் கடாரம் என்பவை முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளைச் சேர்ந்தவையல்ல. தமிழொழிந்த பதினேழ் நிலங்களிற் பல முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளா யிருந்தமையின் கொடுந்தமிழ் நாடல்லாத பிறவற்றையுஞ் சேர்த்துக் கூறிவிட்டார் பவணந்தியார்.

செந்தமிழ் தொல்காப்பியர் காலத்தில் வேங்கடம் வரை வழங்கியதாலும், அதையடுத்து வடக்குள்ள கன்னடமுந் தெலுங்கும் முற்காலத்தில் கொடுந்தமிழா யிருந்தமையாலும், அவற்றுக்கப்பால் தற்போது ஆரிய வடிவாயுள்ள மகாராட்டிரம் (மராட்டி) கூர்ச்சரம் (குசராத்தி) என்பவற்றையும் தமிழ் தெலுங்கு கன்னடத்தோடு சேர்த்துப் பஞ்சத் திராவிடம் என வடநூலார்

பண்டைக்காலத்தில்

வழங்கியமையாலும், வடநாட்டாரிய மொழிகளில் திரவிடக் கூறான சொற்களும் நெறிமுறைகளும் கலந்துள்ளமையாலும், முதலை கூட்டம் முதலிய தமிழ்ச் சொற்கள் நேபாள நாட்டு மலைவாணர் மொழியிலும் வழங்குவதாகத் தெரிகின்றமையாலும், இந்தியாவின் வடமேற்கில் பெலுச்சித்தானத்திலுள்ள மலைவாணர் பிராகுயி என்னு திரவிடமொழியைப் பேசுகின் றமையாலும், ஒரு காலத்தில் நாவலந்தேய முழுவதும் தமிழல்லா விடினும் திரவிடமாவது வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஊகிக்கப்படும்.

ம்

இன்றும் தென்னாட்டில் ஓரளவு செவ்வையாய்ப் பேசப்படும் தமிழ் வடக்கு நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து முதலாவது கொடுந்தமிழாயும் பின்பு திரவிடமாயும் திரிவதையும், திரவிடமும் ஆரியக்கலப்பால் காலாரியமாய் மாறுவதையும், அதற்கப்பால் முறையே அரையாரிய மொழிகளும் முழு ஆ ஆரிய மொழிகளும் வழங்குவதையும், ஆரியர் பழங்குடிச் சொற்களை யெல்லாம் அகற்றிவிட்டு அவற்றிடத்தில் ஆரியச் சொற்களையே வழங்குவதில் கண்ணுங் கருத்துமாயிருந்து இக் கேட்டுத்தொழிலை வடக்கிருந்து தென்கோடிவரை செய்து வருவதையும் நோக்கின், முதற் காலத்தில் ஒரு மொழியே நாவலந்தேய முழுதும்