உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

சேரமான்பெருமாள்

திரவிடத் தாய்

செய்யுள், நம்பியாரூரர் தேவாரம்,

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி என்னும் சேரநாட்டுச் செந்தமிழ் நூல்களாலும், அந் நாட்டுக் கல்வெட்டுகளாலும், செப்புப்பட்டயங்களாலும், மலையாள நூல்களாலும் அறியலாம்.

"வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத் -

தமிழ் கூறு நல்லுலகத்து"

என்று பனம்பாரனாரும்.

"வடக்குந் தெற்குங் குடக்குங் குணக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்”

என்று காக்கைபாடினியாரும்,

"வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொருது கிடந்த நாட்டியல் வழக்கம்

என்று சிறுகாக்கைபாடினியாரும்,

"வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்தான் கெல்லை தமிழது வழக்கே"

என்று சிகண்டியாரும்,

"தென்குமரி வடபெருங்கல்

குணகுடகட லாவெல்லை"

என்று குறுங்கோழியூர்கிழாரும்,

என்று

66

"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

இளங்கோவடிகளும்,

""

இவ் வடிகளின் உரையில், படதிசைக்கண் வடுகொழிந்த திரிபுடைமொழி பலவுளவாக லான் மலையெல்லை கூறி ஒழிந்த திசை மூன்றிற்கும் திரிபின்மையாற் கடலெல்லை கூறினாரெனினு மமையும்" என்று அடியார்க்கு நல்லாருங் கூறியிருத்தலால், தொல்காப்பியர் காலத்தில் கன்னடந்