உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

17

தோன்றவில்லை யென்பதும், தெலுங்கு கொடுந்தமிழ் நிலையில் நின்ற தென்பதும், வேங்கட வெல்லைக்குத் தெற்கிலுள்ள நிலப்பகுதி முழுதும் செந்தமிழே வழங்கின தென்பதும் அறியப்படும். தெலுங்கு பிரிந்தது கி.பி. சுமார் 2 ஆம் நூற்றாண்டு என்றும், கன்னடம் பிரிந்தது கி.பி. சுமார் 6ஆம் நூற்றாண்டு என்றும் கூறலாம்.

-

ம்

கொடுந்தமிழான திசைச்சொற்கட்குச் செப்பு சிக்கு அச்சன் முதலிய தெலுங்குச் சொற்களையும் கன்னடச் சொற்களையும் மலையாளச் சொற்களையும் எடுத்துக்காட்டாக இலக்கணவுரை யாசிரியரெல்லாம் தொன்றுதொட்டு மரபு முறையிற் கூறி வருவதால், தமிழில் திரவிட மொழிகளெல்லாம் பண்டைக் காலத்தில் கொடுந்தமிழ்களா யிருந்தே பின்பு ஒவ்வெ வாரு காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்துபோயின என்று அறிந்து கொள்க. "தென்பாண்டி....நாட்டெண்" என்னும் பிற்கால வெண்பாவில் கன்னடமுந் தெலுங்குங் குறிக்கப்படவில்லையே என்று ஐயுறுவார், குட்டமும் குடமும் வேணுமாகிய மலையாள நாடுகளைக் கொடுந்தமிழ் நாடாக அதிற் குறித்ததினின்றாவது. பிறவும் இங்ஙனமே அதற்குமுன் ஒவ்வொரு காலத்திற் பிரிந்துபோயிருக்க வேண்டுமென்று தெளிந்துகொள்க. இன்றும், 'பச்சமலயாளம்', 'ஹளகன்னடம்’, ‘அச்சதெலுங்கு' என்னும் பழந்திரவிட மொழிநிலைகளை நோக்கின், அவற்றுக்கும் தமிழுக்குமுள்ள நெருங்கிய தொடர்பு புலனாம்.

இந்நிலையில்கூட, தம்பிராட்டி', 'கைநீட்டக்காசு' முதலிய மலையாளச் சொற்களும்; 'கொண்டாடு', 'திக்கில்லாத' முதலிய கன்னடச் சொற்களும்; 'ஓடச்சரக்கு’, ‘மூக்குப் பொடி' முதலிய தெலுங்குச் சொற்களும் எத்துணைத் தமிழ்மணங் கமழ்வன!

7. தமிழினின்று பிற திரவிட மொழிகள் வேறுபடக் காரணங்கள்

(1) தமிழ் அல்லது திரவிட மக்கட் பெருக்கம்

ஒரு மொழியார் மிகப் பலராகப் பெருகிவிடின், அவர் நெடுந்தொலை சென்று பரவ நேரும். அப்போது தட்ப வெப்பநிலை வேறுபாட்டாலும் சுற்றுச் சார்பினாலும் பழஞ்சொல் மாற்றினாலும் தனி விருப்பத்தாலும் சொற்கள் திரியவும் புதிதாகத்