உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

25

தலைசிறந்த முறையில் வளர்க்கப் பெற்றதும் பலவகையிலும் திரவிடக் குடும்பத்திற்குப் பதின்மை தாங்குவதுமான, தமிழமைப்பை அடிக்கடி எடுத்துக் காட்டுவது ஆசிரியரின் சிறப்பு நோக்கமாகும்."

(திரவிட ஒப்பியல் இலக்கணம் - முன்னுரை, ப. 1)

இக் குடும்பம் (திரவிடம்) ஒரு காலத்தில் ஐரோப்பிய ஆசிரியரால் தமிழியம் (Tamulian or Tamulic) என அழைக்கப்பட்டது. ஆனால், தமிழ் பெரும்பாலும் இக் குடும்பத்தில் மிகத் தொன்மையானதும் மிக வுயர்வாகப் பண்படுத்தப் பெற்றதும் இக் குடும்பத்திற்குரிய வடிவங்களிலும் வேர்களிலும் பெரும்பாலான வற்றைப் பெற்றிருப்பதுமான மொழியாயிருந்தாலு.

66

.....

ஷை.ஷை-ப.4)

'தமிழ்-இம்மொழி திரவிட மொழிகளுள் பெரும்பாலும் முதன்முதல் பண்படுத்தப் பெற்றதும் மிகுந்த வளமுள்ளதும் ஐயமறப் பழைமையான வடிவங்களுள் பெரும்பகுதியையும் மிகப்பல வகைகளையும் கொண்டுள்ளதுமானதாதலின், தன் தகுதிக்கேற்றபடி, பட்டியில் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது.”

66

(CJ. NJ - 11.9)

'எவ்வகையிலும் திரவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப் பெற்ற தமிழ் வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன். தனித்து வழங்குதல் மட்டுமன்று; அதன் உதவியின்றித் தழைத்தோங்கவும் இயலும்."

"ஏறத்தாழ எல்லா நூல்களும் எழுதப்பட்டுள்ள செந்தமிழ் என்னும் பழைய அல்லது இலக்கியத் தமிழ் மிகமிகக் குறைந்த வடசொற்களையுடையது; வடசொற்களையும் வடமொழி யெழுத்துகளையும் புறக்கணித்துத் தூய பழந்திரவிட

வொலிகளையும் வடிவங்களையும் வேர்களையுமே கொண்டிருப் பதற்குக் காரணமாக ஊக்கத்தோடும் பொறாமையோடுங் கூடிய அக்கறை காட்டுவதில் உலக வழக்கு அல்லது உரைநடையினின்று வேறுபடுவது. ஒரு தமிழ்ச் செய்யுள், பிற திரவிட மொழிகளிற் போலாது, தான் கொண்டுள்ள வடசொற்களின் மிகுதிக்குத் தக்கவாறன்றி அவற்றின் குறைவுக்குத் தக்கவாறே சுவையும் இலக்கியத் தன்மையும் நிரம்பியதென்று கருதப்படும் அவ்வளவு,