உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

திரவிடத் தாய் இலை என்னும் சொற்கள் தனித்தனி நின்றபோது தனித்தனிப் பொருளையே உணர்த்தும். அவை, வாழைக்காய் காட்டாறு வேப்பிலை எனப் புணர்ந்த போதோ, வாழையின் காய், காட்டிலுள்ள ஆறு, வேம்பின் இலை என அவற்றின் பொருள்கள் தொடர்புபட்ட நிலையைக் காட்டும். முதன்முதல் இம் முறையைக் கையாண்டவர் பொதுமக்களே.

உயிரும் உயிரும் புணரும்போது யகரவகர உடம்படு மெய்கள் தோன்றுவது எம்மொழிக்கும் இயல்பாம். ஆனால், அதை வரிவடிவில் முதன் முதற் காட்டினவர் தமிழரே. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், 140ஆம் நூற்பாவுரையில் “வரையாரென்ற தனான் உடம்படுமெய் கோடல் ஒருதலையன்று. கிளி அரிது, மூங்கா இல்லை எனவும் வரும் என்றும், 259ஆம் நூற்பாவுரையில் 'அதா அன்று என்னும் எடுத்துக்காட்டும், 284ஆம் நூற்பாவுரை யில் பனாஅட்டு என்னும் எடுத்துக்காட்டும், 294ஆம் நூற்பாவுரை யில் கோஒன் என்னும் எடுத்துக்காட்டும் கூறியிருப்பதால், தமிழிலும் முதற்காலத்தில் உடம்படுமெய்யின்றி யெழுதப் பட்டதென ஊகிக்கலாம்.

>

திரவிடம் தோன்றினது குமரிநாடாதலானும், குமரிநாட்டு மொழி தமிழேயாதலானும், திரவிடச் சொற்கட்கெல்லாம் பெரும்பாலும் வேர் தமிழிலேயே இருத்தலானும், தமிழ்ச்சொற்களிற் பெரும்பாலன இன்னும் தொல்லை வடிவிலேயே வழங்குதலானும், செய்யுள் வழக்கில் திரிந்துள்ள ஒருசில சொற்களும் உலக வழக்கில் இயல்பு வடிவில் இருத்தலானும், தமிழொலிகளெல்லாம் இயல்பும் தூய்மையுமாயிருத்தலானும், தமிழிலேயே திரவிட வேர்ப்பொருள் காண முடியும். இதைப் பிற்காட்டும் எடுத்துக்காட்டு விளக்கங் களால் படிப்போர்

வெள்ளிடைமலையாய்க் காண்பர்.

11. கால்டுவெல் தமிழைப் சிறப்பித்துக் கூறுவன

தாமே

"திராவிட மொழியும் கிளைமொழியுமான ஒவ்வொன்றின் இலக்கண அமைப்பையும் அதன்தன் தகுதிக்கும் ஆசிரியர்க்கு அதிலுள்ள பயிற்சிக்கும் தக்கவாறு மிகவோ குறையவோ ஆராய்ந்து விளக்கும்போதே, தாம் முப்பத்தேழாண்டுகட்கு மேலாகப் பயின்று வந்ததும் தம் மதத்தொண்டிற்குப் பயன்படுத்தியதும் திரவிட மொழிகளுட் பெரும்பாலும் முதன்முதற் பண்படுத்தப் பெற்றதும்