உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

23

அவன், போயினான் என்னும் சொற்கள் தெலுங்கில் வாடு, போயினாடு எனத் திரிகின்றன. தமிழில் கான் என்பது காடு எனத் திரிந்து சிறிது பொருள் வேறுபடுகின்றது. ஆனால்,வாடு, போயினாடு என்பன அங்ஙனமல்ல. வருது (வருகிறது), பேயும் (பெய்யும்) முதலிய வடிவுகளும் செந்தமிழ்க்குரியவல்ல.

மூரி (மூ-மூர்-மூரி) என்பது கிழ எருது. இதை மலையாளத்தில் எருது என்னும் பொருள்படப் பொதுப்பித்தல் (Generalisation) நுண்பொருள் விளக்கத்திற்கு மாறானது. ஒருவன் ஒருவனிடத்தில் ஒரு பொருளைக் கேட்கும்போது, இழிந்தோன் ஈ என்றும், ஒத்தோன் தா என்றும் உயர்ந்தோன் கொடு என்றும் கூற விதித்தனர் முன்னோர். ஆனால், இதைத் தமிழரும் தற்போது கைக்கொள்வதில்லை. நான் அவனுக்குத் தந்தேன். அவன் எனக்குக் கொடுத்தான் என்பன வினைவழாநிலைபற்றிய சொற்றொடர்கள்.

மூவகைப்

>

இனி, புணர்ச்சித் திரிபையும் பண்படுத்தத்தின் பாற்படுத்தலாம். புணர்ச்சித் திரிபுகளுள், திரிதல் ஒன்றே பண்படுத்தத்தின்பாற்பட்டது. அதிலும், தேங்குடம் வேப்பிலை போன்ற அதன்பாற்படா. கண் + கடை = கட்கடை, மண் + தாழி = மட்டாழி, பல் + பொடி = பற்பொடி, கல் + பு = கற்பு, கல் + தாழை = கற்றாழை, முள் + செடி = முட்செடி, நள் + பு = நட்பு, தாள் + துணை தாட்டுணை, பொன் +

திரிபுகள்

=

=

குடம் பொற்குடம், பின் + பாடு பிற்பாடு, பொன் + தட்டு பொற்றட்டு என்பன போன்றவையே பண்படுத்தமாகும். அன்பு + தளை = அற்புத்தளை

=

==

என்பது செய்யுட்கே யுரியது. ஏனைத் தோன்றல் கெடுதல் ஆகிய இரண்டும் இயல்பாகவே நேர்ந்தன. தலை + கட்டு = தலைக்கட்டு என்று தமிழில் புணர்ந்தது தலகெட்டு என்று தெலுங்கில் வலிக்காது வழங்குகின்றதேயெனின் ஆரியத்திலும் ஆரியத் தன்மை சான்ற தெலுங்கிலுமுள்ள வல்லினங்களெல்லாம் தமிழ் வல்லினங்களின் இரட்டியாதலின், தலகெட்டு என்னும் தெலுங்குப் புணர்மொழி ஓசையில் தலைக்கட்டு என்னும் தமிழ்ப் புணர்மொழியை யொத்ததே யென்று கூறி விடுக்க.

சொற்களின்

தோன்றல் திரிபு தனித்தனி நின்ற இணைப்பைக் காட்டுகிறது. சொல்லிணைப்பு பொருளிணைப் பைக் குறிக்கும். நிலைமொழியின் ஈற்றுவலி யிரட்டலும் இடைநின்ற மெலி வலித்தலும் இங்ஙனமே. வாழை, காய், காடு, ஆறு ; வேம்பு,