உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

33

கூந்தல்-என்னும் தென்சொல் திரிபு: வார்ந்து -வார்ந்து திணுங்கும்- திங்ஙும். இடை - இட. அருகே அரிகெ.

-

போர்த்துக்கீசிய விடைத்தொண்டர் (Missionaries) முதன்முதல் மலையாளக் கரையில் வந்திறங்கினர் என்றும், மலையாள நாட்டு மொழியைத் தமக்கு முந்திய அரபியர் போல மலபார் என்றழைத்தனர் என்றும், கீழ்கரையிலும் இலங்கைக் கரையிலும் வழங்கிய மொழி (தமிழ்) அதை யொத்திருக்கக் கண்டு அதையும் அப் பெயரால் அழைத்தனர் என்றும் அவர்கள் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காட்டில் 1577 அல்லது 9இல் முதன் முதல் தமிழெழுத்தில் அச்சிட்ட புத்தக மொழியை ‘மலவார் அல்லது தமிழ்' (Malavar or Tamil) என்று குறித்தனர் என்றும் கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார். (முன்னுரை பக். 10-12)

இதனால், 16ஆம் நூற்றாண்டுவரை மலையாள நாட்டு மொழி கொடுந்தமிழாயிருந்த தென்றும், அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கிற் றென்றும் அறியலாம். மலையாளம் மிகத் தெளிவாய்ப் பிரிந்துபோனது 17 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1650) ஆரிய வெழுத்தை வகுத்தும், பெருவாரியாய் ஆரியச் சொற்களையும் விகுதிகளையும் புகுத்தியும், சேரநாட்டு மொழியைச் சிதைத்த துஞ்சத்து எழுத்தச்சனாலேயே.

ல்

1860 ஆம் ஆண்டில்தான் முதல் மலையாள இலக்கணமும் எழுந்தது. 19ஆம் நூற்றாண்டுவரை மலையாளியர் தமிழையும் கற்றுவந்தனரென்றும் அதன் பின்புதான் அவ் வழக்கம் அடி யோடு விடப்பட்டதென்றும் முதியோர் கூறுகின்றனர்.

மலையாள நாட்டில் பார்ப்பனரொழிந்த மற்றக் குலத்தா ரெல்லாம் தமிழர் அல்லது திரவிடரே. குயவர், பணிக்கர், பாணர், ஆயர், ஈழவர், கவுடர் (கவுண்டர்) முதலிய பல குலத்தினர் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.நாயர், நாயாடி,வாரியர், செறுமன் முதலிய குலத்தினர் மலையாளத்திற்குச் சிறப்பாயிருந்த தாலும், அவர் குடிப்பெயரெல்லாம் தனித் தமிழே. தாழ்ந்தது உயர்ந்தது என்று முறையே பொருள் தரும் கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள் குடமலைக் கீழ்நாட்டிற்கே ஏற்றவை. இவை மலையாளத்திலும் வழங்குவது மலையாள நாடு தமிழ்நாட்டுப் பகுதியே யென்பதையும் மலையாளியர் தமிழ் மரபினரே என்பதையும் உணர்த்தும். பிற்காலத்தில் மேற்குத் திசைக்குப்

படுஞாயிறு என ஒரு பெயரை அவர்கள் புனைந்து கொண் டாலும், அதுவும் தனித்தமிழே என்பதை அறிதல் வேண்டும்.