உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

திரவிடத் தாய்

மலையாளம் என்னும் பெயர் அண்மையில் தோன்றிய தாகும்.

சேரநாடு மலைநாடாதலால் சேரநாட்டான் மலையாளி யெனப்பட்டான். மலை+ஆளி=மலையாளி. ஆளி=ஆள். முதலாளி, தொழிலாளி, வங்காளி, பங்காளி முதலிய பெயர்களை நோக்குக. மலையாளியின் நாடும் மொழியும் மலையாளம் எனப்பட்டன. ஒ. நோ : வங்காளி - வங்காளம்.

மலையாளத் திரிபு

சேரநாடு கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழரசரும் செந்தமிழ்ப் புலவரும் திகழ்ந்த செந்தமிழ் நாடாயிருந்தது.* ஐங்குறு நூறும் பதிற்றுப்பத்தும் ஆகிய கழக நூல்களும், சிலப்பதிகாரம் ஆகிய கழக மருவிய நூலும், புறப்பொருள் வெண்பா மாலையும், சேரமான் பெருமாள் நாயனாரின் ஆதியுலாவும், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியும் மலையாள நாடெனப்படும் சேர நாட்டில் எழுந்த செந்தமிழ் நூல்களே.

பதினாலாம்

நூற்றாண்டில் (கி.பி.

1320)வீரராகவ

சக்கரவர்த்தியால் பொறிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டு மொழி 'வாதில்' (வாயில்) 'ஒண்டாயில்' (உண்டாகில்), 'எழுந்நள்ளி' (எழுந்தருளி)' முதலிய சில மலையாளத் திரிபுகளுடன் கூடிய தமிழே அதே நூற்றாண்டில் (கி.பி.1350) இயற்றப்பட்ட கண்ணசப் பணிக்கர் இராமாயண மொழியும் இத்தகையதே.

எ-டு: "கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்து திங்ஙம், குந்தள பாரமோடு முகில் குலத்திட மின்னல் போலே, புண்டரீகேக்ஷணந் நரிகெப் பொலிந்தவள சீத சொந்நாள்.'

இதில், குந்தளபாரம் புண்டரீகேக்ஷணன் என்னும் இரண்டே வடசொற்கள். என்பது

இவற்றுள்ளும்

குந்தளம்

  • நன்னூற் சிறப்புப்பாயிரத்தில் “குணகடல் குடகம் குமரி வேங்கடம், எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்” என்று கூறியிருத்தலால் 12ஆம் நூற்றாண்டில் சேரநாடு கொடுத்தமிழ் நாடாயிருந்தமை பெறப்படும்.