உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

திரவிடத் தாய்

மொழி கேடும், சம்மணம் குத்தி இரிக்க, வழி பிறெக்க, சாடி வீணுகடிக்க, சாகாதது எல்லாம் தின்னுக, வாட்டம் பிடிக்க. (ஒரு பக்கம் சாய்க), பெண்ணினெ வாழிக்க (வாழ்விக்க), புறத்தாக வண்டிகெட்டு, தீன்பண்டம், என்னென்னேக்கும் (என்றென்றைக்கும்), பிறவிக் குருடன், பால் காச்சு, இடவிடாதெ, கள பறி, தீப்பெட்டி முதலியன.

பகிர்வுப் பெயர்

ஒரோன்னு (ஒவ்வொன்று), ஈரண்டு (இவ்விரண்டு), மும்மூன்னு, நன்னாலு, அய்யஞ்சு, பதுப்பத்து (பப்பத்து).

மரபுத் தொடர்கள்

அகவும் புறவும் நோக்க, அவன் துலஞ்ஞு போயி, அதின்றெ இப்புறவும் அப்புறவும் நோக்காதே, உருட்டும் பிரட்டும் பறக, பொத்திப் பொதிஞ்ஞு வைக்க, எனிக்கு எந்து போயி, கடி கடி என்னு பறக, கணக்கும் கார்யவும், கண்ணு மிழிக்குன்னதின் மும்பே, கரகண்டவன், முகம் முறிச்சு பறக, களவும் கய்யுமா யகப்படுக, ஒருநாள் முங்கூட்டி, காடு வாவா வீடு போபோ என்னு பறயுன்ன காலம், காணிச்சுக் கொடுக்க, நின்றெ முகத்து மிச முளச் சிட்டில்லே, அவன்றே கார்யம் கழிஞ்ஞு, இதில் கார்யம் ஒன்னுமில்ல, மற்றொருத்தன் சொல்லப்பட்டிக்கு நடக்குன்னவன்; ரண்டும் கெட்ட, ஒரு கையாயிருக்க, கைகண்ட, வெட்டா வெளிச்சம், சூசிமுனயெ கொண்டு குத்து வானுள்ள நிலம் கொடுக்குன்னில்ல, ஊரும் உடலும் இல்ல, என்றெ வீட்டில் எச்சிலும் குப்பயும் ஆயி, இவன் ஒரு ஆணி ஆகுன்னு, ஒன்னும் இறங்ஙாத சமயம், உந்தும் தள்ளம் (அடிபிடி), நஞ்சு தின்னபோலே ஆயி, ஏந்தி ஏந்திக்கொண்டு நடக்க, கண்ணிம கூட்டியில்ல, உந்தலும் பிடியுமாக, கரகாணுக, உடல் ஒம்பதுகாணும் விறெக்க, ரண்டு கையிலும் சிரட்டபிடிச்சு போக.

வாக்கியங்கள் (சொற்றொடர்கள்)

ஞான் ஆ ஆளோடு ஈ குதிரயெ வாங்கி = நான் அவ் ஆளிடம் இக் குதிரையை வாங்கினேன்.

அச்சன் புறப்பெட்டு போய சேஷம் ஒருத்தன் வந்து என்றெ சோறு தின்னு = அத்தன் (அப்பன்) புறப்பட்டுப் போனபின்பு ஒருத்தன் வந்து என்னுடைய சோற்றைத் தின்றான்.