உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

திரவிடத் தாய்

சிலப்பதிகாரத்தில் கருநாடர் குறிக்கப்படும்

போதெல்லாம்

திருந்தாமையைக் குறிக்கும் 'கொடு' என்னும் அடை கொடுத்தே குறிக்கப்படுகின்றனர்.

"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்

"கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்'

(சிலப். 25:156)

(சிலப். 26:106)

இன்றும் 'யக்ஷகானம்' என்னும் கருங்கூத்து கன்னட நாட்டில் நடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

ஆயினும் கருநடரைக் கருநாடர் என்னும் வழக்கும் உண்மையானும், கூத்தாகிய காரணத்தினும் நிலவகையாகிய காரணம் பெயர்ப்பேற்றிற்குச் சிறத்தலானும், கரிசற்பாங்கான நாடு என்று பொருள் கொள்வதே பொருத்தமாம். கரை நாடு என்பது கருநாடு என மருவிற்றென்பர் சிலர்.

கன்னடநாட் டெல்லை

தெற்கே நீலமலை (நீலகிரி) யிலிருந்து வடக்கே பீடார்ப் (Bidar) பகுதி வரை. மைசூர் கன்னடம் தென்மராட்டம் (மகாராஷ்டிரம்) ஐதராபாத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய சீமைகளிற் பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது கன்னடம்.

நீலமலையிலுள்ள படகர் (வடகர்), என்னும் மலைவாணர் த்தின் திரிபான ஒரு மொழியைப் பேசுகின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் தென்னாட்டிற்கு வந்த மகமதிய மன்னர், அற்றைத் தமிழ்நாட்டின்மேற் கருநட மன்னர் ஆணை செலுத்தியமை காரணமாகத் தமிழ்நாட்டையும் கன்னட நாட்டோடு சேர்த்துக் கர்நாட்டக் (கருநாடகம்) என்றனர். அதை ஆங்கிலேயர் கர்நாட்டிக் (Carnatic) என்று திரித்தனர்.

கன்னட நாட்டு வரலாறு

கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும். மைசூரில் தற்போது ஹளெபீடு (Halebid) என வழங்கும் துவரை நகா (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர்ச் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது துவராபதி எனவும் வழங்கும்.

நச்சினார்க்கினியர், "அகத்தியனார்........

துவராபதிப்

போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்