உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னடம்

57

பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரவுரையிலும், “மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்" என அகத்திணையியல் 32ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.

பண்டைச் சேரநாட்டில் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது.

கடைக்கழகக் காலத்தில் மைசூர்த் துவரைநகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன். அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையூறு செய்யவந்த ஒரு புலியை அவர் ஏவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டா னென்றும் கூறப்படுவன்.

"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்

தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்”

என்று கபிலர் பாடுதல் காண்க.

(புறம்.201)

இப் பாட்டின் அடிக்குறிப்பில், “தபங்கரென்னு முனிவர் ஒரு காட்டில் தவஞ்செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நருங்க, அதுகண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி 'ஹொய் ஸௗ' என்று கூற, அவன் அப் புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமையால் ஹொய்ஸௗனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டா னென்று சிலர் கூறுவர்; சளகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸத்திகா தேவியைச் சளனென்னும் அரசன்