உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

திரவிடத் தாய்

வணங்கச் சென்றபோது புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக் கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி ஹொஸ் ஸௗ' என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதுகொண்டு அதனைக் கொன்றமைபற்றி, `ஹொய் ஸௗன்' என்றும் ‘புலிகடிமால்' என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர்" என்று சாமிநாதையர் அவர்கள் வரைந்துள்ளனர்.

பிற்காலத்தில் 11ஆம் நூற்றாண்டில் துவாரசமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக்கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே. பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. போலி,

ஒ, நோ: வண்டி - பண்டி, வகு-பகு, வல்லாளன் -

I-U,

வல்லாளன் = வலிய ஆண்மையை யுடையவன். ஒரு மறவனுடைய இல்லையும் ஊரையும் இயல்பையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை மிகுத்துக் கூறும் புறத்துறைக்கு வல்லாண்முல்லை (பு.வெ. 177) என்று பெயர்.

"நள்ளாதார் மிடல்சாய்த்த

வல்லாளநின் மகிழிருக்கையே

(புறம்.125)

எனத் தேர்வண்மலையனும்,

"விசைத்தெறி கூடமொடு பொரூஉம்

உலைக்கல் லன்ன வல்லா என்னே

(புறம்.170)

எனப் பிட்டங்கொற்றனும்,

“அடிபொலியக் கழறைஇய

வல்லாளனை வயவேந்தே"

(புறம்.40)

எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் பாடப் பட்டனர்.

கடுந்திறமையுள்ள இருபாலாரையும் வல்லாள கண்டன் வல்லாள கண்டி எனப் புகழ்வது இன்றும் தமிழ்நாட்டுலகவழக்கு. திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் டைக்காலத்தில் ஆண்டதாக அருணாசலபுராணம் கூறும். "மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும் அரபிக் கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்திற்குத் தெற்கும் கோவாவுக்கு

அரசன்