உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

திரவிடத் தாய்

இக் கங்க மரபைச் சேர்ந்தவனே, 12ஆம் நூற்றாண்டில் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தனும், 'அமராபரணன்' 'ஸ்ரீமத் குவளாலபுர பரமேசுவரன்', 'கங்ககுலோற்பவன்' என்று தன் று மெய்க்கீர்த்திகளிற் பா ர ாட்டப்பெறுபவனும்,

பவணந்தி

முனிவரைக்கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழிலக்கணத்தை இயற்றுவித்ததினாலும், நன்னூற் சிறப்புப்பாயிரம்,

"குணகடல் குமரி குடகம் வேங்கடம்

எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்

என்று கூறுவதாலும், மைசூர் நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை 12ஆம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை யென்பது அறியப்படும்.

ஆகவே, பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, வடசொற் கலப்பால் 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்து, பின்பு சிறிது சிறிதாகத் தெற்கே தள்ளிவந்து தற்போது நீலமலை வரை பரவியுள்ள தென்க.

"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்'

"கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்"

என்று சிலப்பதிகாரங் கூறுவதால் கொங்கண நாட்டைச் சேர்ந்த கருநட நாட்டிலேயே கன்னடம் முதலாவது தோன்றியிருத்தல் வேண்டும். இப்போது கொங்கண நாட்டிற்கும் மலபாரு இடைப்பட்ட மேல்கரை நாடே, தென்கன்னடம் வடகன்னடம் என இரு பகுதியாய்ப் பகுக்கப்பட்டுக் கன்னடம் (Kannada) என்னும் பெயரால் வழங்கி வருகின்றது. வடகன்னடம் கொங்கண நாட்டுப் பகுதியே. இதனால், கரைநாடு என்பதே கருநாடு என மருவிற்று என்று கொள்ளவும் இடமுண்டு.

கொங்கணம் என்பது கொண்கனம் என்னும் சொல்லின் திரிபு. கொண்கன் என்பது நெய்தல்நிலத் தலைவன் பெயர். கொங்கணம் ஒரு நெய்தல் நாடாதலால், கொண்கு (நெய்தல்நிலம்) என்னும் பெயர் முறையே கொண்கனம் - கொங்கண ம் எ ன் திரிந்திருக்கலாம். கொங்கண நாட்டினர், கொங்கணர் என்றும்

று