உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னடம்

61

கொங்கணவர் என்றும் கொங்கணியர் என்றும் கூறப்படுவர். கொங்கணார் என்று ஒரு பண்டைத் தமிழ்ச் சித்தர் இருந்தார்.*

மைசூர்ச் சீமையிலுள்ள ள பலவூர்கள் இன்றும் தமிழ்ச் சொற்களையே தம் பெயரீறாகக் கொண்டுள்ளன.

(எ-டு): ஊர் (மைசூர்), புரம் (குவளாலபுரம்), பள்ளி அல்லது ஹள்ளி (சிக்னவகன் ஹள்ளி), பட்டினம் (சீரங்கபட்டினம்), கரை (அரிசிக்கரை), பேட்டை முதலியன. கன்னட நாட்டிலுள்ள கௌடர் (கவுண்டர்), திகழர் (தமிழர்), குறும்பர், உப்பாரர், கொரகர் (குறவர்), ஹொலியர் (புலையர்), பேடர் (வேடர்) முதலிய குலத்தினர் தமிழ் மரபினரே. கன்னடியர் என்னும் பெயரும் மொழிபற்றிக் குலங்குறித்த தமிழ்ச்சொல்லே, மைசூர் அரசரின் இற்பெயரான உடையார் என்பது தனித் தமிழ்ச் சொல்லாயிருப்பது மிக மிக மகிழத்தக்கது.

கன்னடம் திரிந்ததற்குக் காரணங்கள்

(1) கன்னடச் சீமையில் தமிழ் மன்னராட்சி ஒழிந்தமை.

(2) அங்குத் தமிழ் நூல்கள் வழங்காமை.

(3)

தமிழர் விழிப்பின்மை.

(4) தட்பவெப்ப நிலையால் தமிழ் ஒலியும் சொல்லும் திரிந்தமை.

(5)

வடசொற் கலப்பும் வடமொழியிலக்கண வமைப்பும்.

(1) ஒலித்திரிபு

கன்னடம் திரிந்த முறைகள்

எ-டு: ப-ஹ, பள்ளி - ஹள்ளி, பாடு - ஹாடு

(2) உயிரீற்றுப் பேறு

எ-டு: எதிர் - எதுரு, இருந்தேன் - இருத்தெனெ.

கொங்கண முனிவர் வாசுகியம்மையாரால் கடிந்து கொள்ளப்பட்டதினாலோ, கொங்கண நாட்டாரின் இயல்பான பேதைமையாலோ, கொங்கணன் கொங்கணவன் கொங்கணியன் என்னும் பெயர்கள் பேதைமை குறித்த பெயர்களாக வழங்கி வருகின்றன.