உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

திசைச் சொற்கள்

=

திரவிடத் தாய்

முத்தப்ப அல்லது முத்தாத்த பூட்டன் (பாட்டன் தந்தை), முத்தம்ம அல்லது முத்தஜ்ஜி = பூட்டி (பாட்டிதாய்), அஜ்ஜ = பாட்டன், அஜ்ஜி = பாட்டி, தொட்டப்ப பெரியப்பன். தொட்டம்ம அல்லது தொட்டவ்வ = பெரியம்மை, சிக்கப்ப = சிற்றப்பன், சிக்கம்ம அல்லது சிக்கவ்வ = சிறிய தாய்.

குறிப்பு: முது+அப்ப = முத்தப்ப. அச்சன் - அஜ்ஜன், அச்சி - அஜ்ஜி, தொட்ட (தோடு) = பெரிய, சிக்க = சிறிய.

4. மக்கட் பெயர்

=

ஆளு, மக்களு, அரசு, தோட்டகாரனு, கும்பார (கும்பாகாரன் குயவன்), ஒலெகார (கடிதம் கொண்டு போகிறவன்), மாத்தாளி (பேச்சாளி. மாற்றம் = சொல்), மாறாளி (விற்கிறவன். மாறு = வில்), சமர்த்த, மந்தி (மாந்தர்), குண்ட்ட (முடவன்), குருட, மூட, ஊமெ, முதுக (கிழவன்), சோமாரி (சோம்பேறி), சிக்கவனு (சிறியவன்), சண்ணவனு (சின்னவன்), ஹொசெயனு (புதியன்), எளெகவனு (இளையவன்), கரியவனு, கரியனு, நெரெயவனு (நெருங்கியவன்), பிளியவனு (வெளியவன்), ஹளெபனு (பழையன்), கள்ளனு, ஒடெய தூத, கம்மார, காவலுகார, அர மகள், நாணிலி, அம்மண்ணி, ஆண்டி ஒட்ட (ஒட்டன்), கன்னெ (கன்னி), குதுரெகார, கொரவ (குறவன்), செம்பு குட்டிக (செம்பு கொட்டி), தலாரி (தலையாரி), திண்டிப் போத்த (தின்றிப்போத்து - ஆகுபெயர்).

5. விலங்குப் பெயர்

ஆவு, ஆனெ (ஆனை), எத்து (எருது), ஒண்ட்டெ (ஒட்டை), கரு (கன்று), குதுரெ, ஆடு, குரி (கொறி = ஆடு), நரி, நாயி, சிரத்தெ (சிறுத்தை), மரி (மறி=குட்டி), ஹுலியு (புலி), கழ்தெ (கழுதை), கடசு (கிடாரி), தகரு (தகர்), மேக்கெ (மோத்தை = வெள்ளாட்டுக்கடா), கூளி, ஹோத்து (போத்து), மொலவு (முயல்), குணி மொலவு (குழி முயல்), ஹந்தி (பன்றி), பெக்கு (வெருகு), எய், எம்மெ (எருமை), கடவெ (கடமை), கரடி, கந்து (கன்று), குட்டி, குரங்கி.

6. பறவைப் பெயர்

ஈச்சல் (ஈசல்), அந்தி (அந்து), கிளி, AE (AO), கோளி (கோழி), காகி (காக்கை), பைரி (வைரி), கூகெ (கூகை), கடல்