உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னடம்

67

கொப்பு, சட்டெ (சட்டை), சேல (சேலை), கட்டி, செர்ப்பு (செருப்பு), தண்டெ (தண்டை), தலகுட்டெ (தலைக்குட்டை).

16. தட்டுமுட்டுப் பெயர்

பெட்டகெ (பெட்டகம்), மேஜு (மேசை), பட்லு (வட்டில்), தொட்டிலு,கூடெ (கூடை), செம்பு, அடப்ப (அடைப்பம்), உறி, கல (கலம்), குட (குடம்), குப்பி, சட்டி,ஜாடி (சாடி), ஜோளிகெ (சோளிகை), தட்டெ (தட்டம்), தடிக்கெ (தடுக்கை), தபலே (தவலை), தளிகெ (தளிகை), தொட்டி.

17. இடப்பெயர்

இடெ (இடம்), இடுகு (இடுக்கு), ஊட்டெ (ஊற்று), ஹொல் (புலம்), அடவி, தோப்பு, தோட்ட, மூலெ (மூலை), பாகிலு (வாசல்), குணி (குழி), கடல், பெட்டெ (பொற்றை = மலை), அறெ (அறை), கேரி (சேரி), மெலெ (மலை), பிந்தில் (இல்லின் பின்னிடம்), கழனி, புத்து (புற்று), மனெ (மனை), கோடெ (கோட்டை = மதில்), ஊரு, அரமனெ, பட்டண (பட்டினம்), ஹள்ளி (பள்ளி), படக (வடக்கு), தெங்க (தெற்கு), குடிசலு (குடிசை, குடி, செரெமனெ (சிறைமனை), அங்காடி, சீமெ (சீமை), பேட்டெ (பேட்டை), ஹள்ள (பள்ளம்), கட்டட, கடெ (கடை), காடு, பேலி (வேலி), அடவி, ஒலெ (உலை=சூளை), கூடாரம், ஆகெ (அகம்), அகழ் (அகழி), அண்டெ (அண்டை), அணெ (அணை), அம்பல (அம்பலம்), அருகு, உக்கட (உக்களம்), உம்பளி (உம்பளம்), எல்லெ (எல்லை), குட்ட (குன்றம்), கேணி, கொட்டகெ (கொட்டகை), கொட்டார (கொட்டாரம்), கொத்தள (கொத்தளம்), கொனெ (கொனை), கோட்ட (கோட்டை), சில்லி, சுடுகாடு, தொணெ (சுனை), திட்டி, திட்டு, தொள (துளை), ஏரி, ஒட்டெ (ஓட்டை),ஒரம் கரெ (கரை), கன (கனம்), கன்ன (கன்னம்), கா, காணி, குழி, கொள (குளம்).

18. காலப் பெயர்

சமய, ஹகலு (பகல்), சாயங்கால, ராத்ரி (இராத்திரி), இருள் (இரவு), திங்களு (மாதம்), வார, ஹொத்து (பொழுது), வேளி (வேளை), பிடுவு (விடுவு=ஓய்வு), கடு (தவணை), கோடெ (கோடை).