உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

திரவிடத் தாய்

மக்களெல்லரு பாடசாலெயன்னு பிட்டு, தம்ம தம்ம மன களிகெ ஹொறட்டு ஹோத பளிக்க ஜவானனு பாகிலுகளன்னு முச்சி பிடுவன்னு = மக்க (பிள்ளைக) ளெல்லாரும் பாடசாலையை விட்டுத் தம்தம் மலைகளுக்குப் புறப்பட்டுப் போன பிறகு சேவகன் வாசல்களை மூடிவிடுவான்.

நாளெவார ஊரினல்லி இருவிரோ எம்புதாகி அவரன்னு கேளு = நாளை (அடுத்த) வாரம் ஊரில் இருப்பீரோ என்பதாக அவரைக் கேள்.

மெழெயு பாரதித்தரெ பெளெ யாகுவவுதில்லை வராதிருந்தால் விளை (விளையுள்) ஆகுவதில்லை.

விதைக்கிறவன் உவமை

மழை

"இகோ, பித்துவவனு பித்த ஹொரட்டனு. அவனு பித்துவாக கெலவு மார்கத ஹத்தர பித்து. பஷிகளு பந்து அதன்னுதிந்து பிட்டவு. பேரெ கெலவு பஹள வண்ணு இல்லாத பண்டெஸ்தள களல்லி பித்து; அதக்கெ ஆளவாத மண்ணு இல்லத காரண, சங்கடலே மொளியித்து; ஆதரெ சூர்யனு மூடிதாக அது பெந்து அதக்கெ பேரு இல்லாததரிந்த ஒணகி ஹோயித்து. பேரெ கெலவு முள்ளுகள மேலெ பித்து, முள்ளுகளு பெளெது, அணகிசிதவு, பேரெ கெலவு ஒள்ளே பூமிய, மேலெ பித்து, ஒந்து நூ, ரஷ்டு, ஒந்து அரவத்தஷ்டு, ஒந்து மூவத்தஷ்டு பல கொட்டத்து, கேளுவதற்கெ கிவிகளுள்ளவனு கேளலி".

இதோ, வித்துகிறவன் வித்தப் புறப்பட்டான், அவன் வித்துகையில் சில வழியருகே விழுந்து, பறவைகள் வந்து அதைத் தின்றுவிட்டன. வேறே சில மிகுந்த மண் இல்லாதபாறை யிடங்களில் விழுந்தது. அதற்கு ஆழமான மண் இல்லாத காரணமாய் விரைந்து முளைத்தது; ஆனால் வெயில் ஏறினபோது அது வெந்து, அதற்கு வேரில்லாததால் உணங்கிப் போயிற்று, வேறே சில முட்கள் மேலே விழுந்தது. முட்கள் வளர்ந்து அதை நெருக்கிவிட்டன. வேறே சில நல்ல நிலத்தில் விழுந்து ஒன்று நூறாகவும் ஒன்று அறுபதாகவும் ஒன்று முப்பதாகவும் பலன் கொடுத்தது. கேட்கிறதற்குச் செவிகளுள்ளவன் கேட்கக் கடவன்.

குறிப்பு: மெய்மறை (சத்திய வேதம்) என்னும் கிறித்தவ மறையின் மொழிநடை விடைத்தொண்டராதலால், மேற்கூறிய உவமையில் அஃறிணைப் பன்மையெழுவாய்கள் ஒருமை வினையொடு முடிந்தன; பன்மைச் சொற்கு ஒருமைச்சொல் வந்தது.