உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்குநாட் டெல்லை

தெலுங்கு

தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற்காட்டிலிருந்து சிக்காக்கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர்ச் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், 'கொடுக்கப்பட்ட கோட்டங்கள்' (Ceded districs) கர்நூல் ஐதராபாத்துச் சீமையின் பெரும்பகுதி நாகபுர நாட்டின் ஒரு பகுதி கோண்டுவனம் ஆகிய இடங்களில் பெரும்பாலும் தாய் மொழியாகப் பேசப்படுவது தெலுங்கு.

தெலுங்குப் பெயர்

தெலுங்கிற்கு வடுகு ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது; வடுகு என்பது தமிழராலும், ஆந்திரம் என்பது ஆயராலும் இடப்பட்டன.

தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம் என்பது. இது முதலாவது தெலுங்குநாட்டுப் பெயராயிருந்து பின்பு அந் நாட்டு மொழியைக் குறித்தது. ஆந்திரம் என்பதும் இங்ஙனமே.

தாலமி என்னும் ஞால நூலாசிரியர் 'த்ரிக்ளுப்தொன்'

'த்ரிக்ளுப்தொன்’, 'Triglupton' 'Triglupton' என ஒரு கங்கைக் கரை நாட்டையும், பிளினி என்னும் சரித்திராசிரியர் 'மெர்டொகலி கம்' (மூன்று கலிங்கம்) என ஓர் இந்திய நாட்டையும் குறித்திருப்பதனாலும், ஒரு பண்டை இந்திய அரச மரபினர் 'திரிகலிங்கத் தலைவர்' என்னும் பட்டத்தைச் சூடிக் கொண்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுவதாலும், புராணங்களிலும் ஒரு செப்புப் பட்டயத்திலும் 'திரிகலிங்கம்' என்னும் பெயர் காணப்படுவதா லும், பிளினி என்பவர் கலிங்கத்தினும் (Calingae) வேறாக மக்கோ-கலிங்கே (Macco-Calingae), கங்கரிதெசு கலிங்கே