உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

திரவிடத் தாய் (Gangaridas-Calingae) என இரு நாடுகளைக் குறிப்பதாலும், பாரதத்துள் கலிங்கர் மும்முறை குறிக்கப்படு வதாலும், கலிங்கம் (ஒரிசா மாகாணமும் கஞ்சங் கோட்டகமும்) என ஒரு தெலுங்கு நாடிருந்ததாலும், பண்டைத் தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியா யிருந்ததென்றும், அதனால் திரிகலிங்கம் எனப்பட்ட தென்றும் அறியலாம். திரிகலிங்கம் என்பது, முறையே திரிலிங்கம் - தெலுங்கம் - தெலுங்கு என மருவிற்று. தாரநாதன் என்னும் திபேத்தச் சரித்திராசிரியர் தெலுங்கு நாட்டைத் திரிலிங்கம் என்றும், அதன் ஒரு பகுதியைக் கலிங்கம் என்றும், அதன் தலைநகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார். தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க, தைலிங்க, தெலுகு, தெனுங்கு தெனுகு என்னும் வடிவங்களிலும் தெலுங்கர்க்குள் வழங்கிவருகின்றது. இவற்றுள் தெனுகு என்னும் வடிவத்தைச் சிறந்ததாகக்கொண்டு அதற்குத் ‘தேன் போன்றது' என்னும் பொருள் கற்பிப்பது தெலுங்குப் பண்டிதர் வழக்கம்!*

தெலுங்குநாட்டு வரலாறு

முதன் முதன் தெலுங்குநாட்டைப் பற்றிக் குறிப்பாகத் தெரிவிப்பது தொல்காப்பியம்.

"வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறும் நல்லுலகத்து

""

என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தாலும்,

"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

என்னும் தொல்காப்பிய நூற்பாவின் உரையாலும்,

66

'வடதிசை மருங்கின் வடுகு' வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்”

என்னும் சிறுகாக்கைபாடினியார் கூற்றாலும்,

தொல்காப்பியர் காலத்தில் காலத்தில் வேங்கடத்திற்கு வடக்கில் கொடுந்தமிழ் வழங்கிற்றென்றும், அது பின்பு திரிந்து வ (தெலுங்கு) என்னும் கிளைமொழி யாயிற்றென்றும் அறியலாம்.

வடுகு

இது தென்மொழி என்னும் தமிழ்ப்பெயர்க்குத் தேன்மொழி என்று தமிழ்ப் புலவருட் சிலர். பொருள் கூறுவதை ஒக்கும்.

1.

வடுகு – வடவெல்லையிலுள்ள வடுக நாடு.